பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 105 புதிய உரை: இயற்கைக் கொடையான குழந்தைகளின் இளமை நிரம்பாத மெல்லிசைச் சொற்களைக் கேளா முனிவர், பகைவர், குழந்தையற்றோர்தாம் குழலும், யாழும் இனிது என்பர். விளக்கம்: முற்றும் துறந்த முனிவர், பற்றற்றுப் போனதால், இளைய இசையோசைச் சொற்கள் அவர்கள் செவிகளில் ஏறாது. மனத்துக்குள் பதியாது. அன்பைத் துறந்த பகைவர்க்கோ மழலை அமுதத்தை ஏற்க மனதும் இடம் தராது. உற்றவர்க்கோ அன்பு குறைந்த புழுக்கத்தால் ஒத்துக்கொள்ள இயலாது. அதனால்தான், பேசும் மழலையின் குரலை இரசிக்காது. இசைத்து எழுப்பும் குழலையும் யாழையும் இனிதென்பார்கள். ஆனால் பெருமைக்குரிய பெற்றோர்க்கோ அதுவே சாவா மருந்து. மூவா விருந்து. 67. தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல் பொருள் விளக்கம்: தந்தை = தகப்பன் ஆனவன் மகற்கு = தன் வழித் தோன்றலுக்கு ஆற்றும் நன்றி = வழிகாட்டுகிற வாழ்வு சுகமானது அவையத்து = திரண்டிருக்கும் பொதுமக்கள் மற்றும் கற்றறிந்தோர் அவையின்; முந்தி = முன்னதாக செயல் = ஒழுக்கத்தோடும் வலிமையோடும் இருப்ப = நிலையாக வாழ்ந்திருக்கக் கற்றுத்தரல் வேண்டும். சொல் விளக்கம்: நன்று + இ = அகம், வாழ்வு, பெருமை இருப்ப = நிலையாக இருக்கச்செய்தல்; செயல்- ஒழுக்கம், வலிமை

அவையம் = திறன், அறிவாளர் கூட்டம்

முற்கால உரை: பிதா பிள்ளைக் குச் செய்யும் உதவியானது சபையில் கல்வியில் வல்லவனென முற்பட்டு இருக்கச் செயல் என்பதாம்.