பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா = = e தற்கால உரை: உடம்பின் உள் உறுப் பாகிய அன்பு இல்லாதவர்களுக்கு உடம்பின் வெளி உறுப்புகளெல்லாம் இருந்தும் அவற்றால் என்ன நன்மை ஏற்படும்? ஒன்றும் ஏற்படாது. புதிய உரை: உடலால் மனத்தால் உண்டாகிற அன்பு இருந்தாலும் சீவனாகிய ஆன்மாவிலிருந்து எழுகிற அன்பில் தான் சீவத்துவம் உண்டு. புறத்துறுப்புக்கள் எல்லாம் ஏவலுக்குரியவைகளே. அதனால், அவற்றையெல்லாம் கட்டியுள்ள யாக்கையால், எந்தப் பயனும் ஏற்படாது. விளக்கம்: உலக நடைமுறைக்காக செயல்படுவது உடல் செய்யத் தூண்டுவது மனம். உடல் மனம் இரண்டையும் ஆற்றுப்படுத்துவது ஆற்றுமா (ஆத்மா). அவற்றைப் பயனுடையதாக ஆக்குவதும் ஆன்மா (ஆன் - பார்த்துக் கொள்வது). ஆகவே ஆத்மாவிலிருந்து தோன்றுகிற ႕ அனைவருக்கும் உதவும். அதுவே அனைவர்க்கும் கருவியாக உதவும். உள் அன்புதான் எல்லாம் செய்யும். பிற அன்பு போலியாகி விடும் என்கிற குறிப்பைத்தான் இந்த 9 வது குறளில் வள்ளுவர் வலியுறுத்துகிறார். 80. அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு பொருள் விளக்கம்: அன்பின் வழியது - அன்பின் இடமானது (நெறியானது) உயிர்நிலை = உயிர்க்காற்றாகிய சீவனில் உள்ளது அஃதில்லார்க்கு - பிராணனில் பிறப்பெடுக்காத அன்பு என்புதோல் போர்த்த உடம்பு = தோலால் மூடப்போர்த்த உடம்பு பட்ட சரீரமாகவே இருக்கும். அதாவது சவமாகவே இருக்கும். சொல் விளக்கம்: வழி = இடம், நெறி; உயிர்நிலை = ஆன்மா, ஆத்மா முற்கால உரை: அன்போடு பொருந்திய உடலே உயிருள்ள உடலாகும். அவ்வன்பு இல்லா வுடலே உயிரற்ற வுடலாகும்.