பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

,ொம் mi To so". T திருக்குறள் புதிய உரை II என்னைக் கேட்டவர்கள் நிறைய பேர்கள். வேண்டாத வேலைதானே என்று கிண்டலடித்தவர்களும் உண்டு. இதையே திரும்பத் திரும்ப ன்ம்ை கேட்பவர்கள் எாாளம் பேர் க்கிறார்கள். இன்னு ஏர இருக்கிற விளையாட்டு என்றால் ஒடி ஆட வேண்டியது. பந்தை உதைப்பது, அடிப்பது, அதற்கான விதிமுறைகள் என்றுதான் பலரது

  1. 軒 H 郵 ■ கருத்தாக, இன்னும் இருந்து வருகிறது.

அந்த அடிப்படைத் தவறான கருத்துகளை மாற்றுவதற்காக, விளையாட்டு நூல்களையெல்லாம் விழுமிய தமிழ்த்துறை இலக்கியமாக எழுத வேண்டும் என்று விரும்பினேன். அந்த இலட்சிய வேட்கையால், வெறியால் ஏராளமான தமிழ் நூல் களையெல்லாம் படிக்கத் தொடங்கினேன். அதுபோலவே, விளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான புவியியல், உயிரியல், இயற்கையியல், வேதியல், உளவியல், வானவியல், தத்துவ இயல், வாழ்க்கைஇயல் போன்றவற்றில் எழுதப்பட்ட பல ஆயிரக் நூல்களையும் படித்தறியும் முனைப்பில், கடந்த முப்பதாண்டு காலமாகத் தொடர்ந்து படித்துக்கொண்டே200நூல்களுக்கும் மேலாக, விளையாட்டுத்துறை தமிழ் இலக்கிய நூல்களை எழுதியுள்ளேன். "வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்' 'வள்ளுவர் வணங்கிய கடவுள்' என்னும் இரண்டு நூல்களை எழுதும்போது, அதற்காகத் திருக்குறளை நான் ஆயிரம் தடவை யாவது படித்திருப்பேன். ஆன்ற பொருள் அறியத் துடித்திருப்பேன். இவ்வாறு ஆய்வு நோக்கத்தோடு படிக்கப் படிக்க, எனக்குள்ளே புதிது புதிதாகப் பல புதிய கருத்துக்கள் புலப்படத் தொடங்கின. தோன்றிய கருத்துக்களை, எனக்குத் தெரிந்த தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள், வாசக அன்பர்கள் பலரிடம் பகிர்ந்து கொண்டபோது விளக்கம் புதிதாக இருக்கிறதே! குறள் முழுவதற்கும் உங்களால் இப்படிப் பொருள் கூற முடியுமா?’ என்று அவர்கள் அனைவரும் வியப்புடன் கேட்ட வினாவுக்கு விடையாகத்தான், தெளிவானதொரு புதிய பொருள் உரையை எழுத முயற்சித்திருக்கிறேன். எனக்கு எவ்வளவு தகுதி என்று பார்ப்பதைவிட, எனது உரைக்கு எவ்வளவு தகுதி என்று ஆய்வது சிறப்புடைத்ததாகும். திரும்பத் திரும்பத் திருக்குறளைப் படித்துப் பார்த்ததன் விளைவே. இந்தத் திருக்குறள் உரையை எழுத நேர்ந்தது. இந்த