பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 99. இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது பொருள் விளக்கம்: இன்சொல் (தான் பேசியதும் பிறர் பேசியதுமான) இனிய சொல்; இனிதீன்றல் - இன்பம் பயக்கிறது == காண்பான் = என்னும் காட்சியைக் காண்கிற அறிவானவன், அறிபவன் (ஆன்மாவைப் பெறுபவன்) வன்சொல் = பொல்லாங்கைத் தருகிற சொல்லை; எவன் - எப்படி கொலோ பிதற்றி (அலட்டிக் கொண்டு) தொந்தரவு தந்திட வழங்குவது = பேசிட முடியும்? சொல் விளக்கம்: காண்பான் = ஞாதிரு. ஞாதிரு என்றால் ஞானவான், அறிபவன், ஆன்மா என்று அர்த்தம்; எவன் - எப்படி; சொல் = வருத்தம்; கொல் வருத்தம், அலட்டுதல் (அலட்டுதல் என்றால் பிதற்றுதல், தொந்தரவு செய்தல்) வன்சொல் = பொல்லாங்கு தரும் சொல் முற்கால உரை: இன்சொல் இன்பந் தருதலைக் காண்பவன் வன்சொல் சொல்லுவதென்ன? தற்கால உரை: பிறர் கூறும் இனிய சொற்களைக் கேட்ட பிறகு அவன் பிறரிடம் இன் சொல்லையே பயன்படுத்த வேண்டும். புதிய உரை: பேசுகிற இனிய சொல் இன்பம் பயப்பதைக் காட்சியாகக் காண்கிற அறிபவன் (ஆன்மாவை வளர்த்துக் கொள்கிறவன்). பொல்லாங்கு தருகிற சொல்லை எப்படி பேசி பிதற்றிட முடியும்? விளக்கம்: இன்பம் பயக்கிற சொற்களைக் காட்சி பூர்வமாக அறிகிறவன் ஞானவான் ஆகிறான். ஞானவான் என்பவன் நல் ஒழுக்கம் வாய்ந்தவன். உடலையும் மனத்தையும் காக்கிற ஆற்றல் ஆன்மாவுக்கு உண்டு. அதனால், காண்பான் என்ற சொல்லை வள்ளுவர் இங்கே பயன்படுத்துகிறார். ஆத்மபூர்வமாக இனிய சொற்களை நேசிக்கிறவன் எப்பொழுதும் வன்சொல்லை வழங்க மாட்டான் என்கிறார் வள்ளுவர். உடலாலும் மனதாலும் மட்டுமல்ல, இன்சொல்லை ஆத்மாவாலும் வழங்க வேண்டும் என்பதே வள்ளுவரின் நோக்கம்.