பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 143 100. இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று பொருள் விளக்கம்: இனிய = பிறரை மகிழ்விக்கும் மனமும் சொல்லும் உளவு = தம்மிடம் இருக்கும் இரகசியத்தை ஆக = முழுவதும் அறிந்திருக்க இன்னாத கூறல் = பிறரைத் துன்புறுத்தும்படி பேசுதல் கனியிருப்ப = மனம் களிக்கின்ற தித்திப்புப் பழம் இருக்க காய் = விதையை (துவர்ப்புச்சுவையை) கவர்ந்து = கொள்ளையடிப்பது; அற்று = போன்றதாகும் சொல் விளக்கம்: இனிய -மகிழ்விக்கிற; உளவு = இரகசியம் ஆக = அவ்வாறாக, இன்னாத துன்பம் செய்கிற; கனி - தித்திப்பு: காய் = விதை, பழுக்காத கனி முற்கால உரை: இன்சொல் இருக்க வன்சொற் சொல்லுதல் கனியிருக்கக் காயைத் தின்றாற்போலும் என்பதாம். தற்கால உரை: இனிய சொற்கள் இருக்க இன்னாத சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்க காய்களைப் பறித்தல் போலாகும். புதிய உரை: பிறரை மகிழ்விக்கும் இரகசியம் முழுவதும் அறிந்திருந்தும், பிறரைத் துன்புறுத்தும்படி பேசுகிற சொல்லானது, மனம் களிக்கப் பேசுகிற பழத்தை விட்டு விட்டுத் துவர்க்கின்ற விதையைக் கொள்ளையடிக்கும் செயலுக்கு ஒப்பாகும். விளக்கம்: தெரிந்ததை, உகந்ததை, முடிந்ததை செய்யாமல், எதிர்மாறாகச் செய்தல், எந்தவிதத்திலும் சிறப்பு தராது. கொடுப்பதைத் தராமல் கொள்ளையடித்து மகிழும் கொடுரக் குணத்திற்கு ஒப்பாகும் என்று முத்தாய்ப்பாக முடிக்கிறார். வள்ளுவர். -