பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா அந்த நேரத்திற்கான உதவி, உதவியைச் செய்கிறவரின் உதவி. இந்த இரண்டும்தான் உதவியின் அளவை மிகுதியை வெளிப்படுத்திக் காட்டும் என்பதால் உதவிடும் நேரம் காலம் நெஞ்சம் கண்டு, உதவியை அறிக என்று கூறிச் செல்கிறார் வள்ளுவர். . - 106. மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு பொருள் விளக்கம்: மாசற்றார் (மா + சற்றார்) - மேன்மையான நற்குணாளர்களுக்கும் உள்ள கேண்மை = (கேள் + மை) குற்றத்தை செவிமடுத்து மறவற்க = நிலையாக (அதனை) நீக்கிவிடு துன்பத்துள் = துயரம் நேர்கிற பொழுது துப்பு ஆயார் = உதவுவதனால் தனக்கு நன்மை கிடைக்குமா என்று எதிர்பார்க்காமல் உதவுபவர்; நட்பு = தொடர்பை துறவற்க = (என்றும்) துறந்து விடாதே சொல் விளக்கம்: மா= அறிவு, பெருமை, மேன்மை; சற் = நல்ல, சன். கேள்= செவி கொடு, கீழ்ப்படி, புத்திகேள்; மை = குற்றம் துப்பு = நன்மை; ஆயார்- ஆராய்பவர்; நட்பு = தொடர்பு, உறவு முற்கால உரை: +. குற்றமற்றவர் சிநேகத்தை மறவாதிருக்கக் கடவன். துன்ப காலத்து உதவினவர் சிநேகத்தை விடாதிருக்கக் கடவன். தற்கால உரை: - குற்றமற்றவரின் நட்பையும், காலத்தே உதவி செய்தவர்களையும் எந்த ஒரு காலத்திலும் மறக்கக் கூடாது. புதிய உரை: உதவுகிற பண்பாளரின் குறைகளை மறந்து விடு. மற்றவர் அவர் துன்பத்தில் நமக்கு என்ன கிடைக்கும் என்று ஆராயாமல் உதவுகிறவரின் தொடர்பை துறக்காமலும் நன்றி அறிதல் வேண்டும். விளக்கம்: -- உதவுகிறவர்களின் தரம் பற்றி 5வது குறளில் கூறிய வள்ளுவர், 6 வது குறளில் மேன்மையானவர் என்பதாக மாசற்றார் என்கிறார்.