பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை I5] உதவுவதில் சொல்லால், பொருளால், செயலால் என்று பலவகை இருப்பதால், சொல்லால் உதவி பெறுபவர் குற்றம் தீர்க்கக் கூறுகிறபோது மறக்காமல் கேட்டு நடக்கவே மறவற்க என்றார். உதவுபவர்களில் பலர் தமக்கு ஆதாயம் தேடுவார்கள் என்பதைக் குறித்துக் காட்டி ஆதாயம் தேடாதார் உதவி துறக்காதே என்பதற்காகத்தான் துப்பு ஆயார் என்றார். துறத்தல் என்பது மனத்தாலும் செயலாலும் நீக்கி விடுதல் என்பதால் துறவற்க என்றார். சொல் கேட்க உள்ளம். வாழ்வு காண உறவு என்ற நல்வழியை வள்ளுவர் கூறுகிறார். 107. எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தம்கண் விழுமம் துடைத்தவர் நட்பு பொருள் விளக்கம்: == எழுமை = (வாழ்க்கையில்) உயர்ச்சி பெற எழு = மனக்கிளர்ச்சியுடன் (இரும்பொத்த உறுதியுடன்) பிறப்பும் தொடங்குகிற (ஒவ்வொரு முயற்சிக்கும்) தம்கண் = தன்னிடத்தில் உண்டாகிய விழுமம் துடைத்தவர் (சிக்கலை) துன்பத்தை நீக்கியவரின் நட்பு = உறவுத் தொடர்பை உள்ளுவர்= நினைத்து மேலும் (உற்சாகம் பெறுவர்) சொல் விளக்கம்: எழுமை = உயர்ச்சி; எழு = எஃகு, மனம், கிளர் பிறப்பு = தொடக்கம்; விழுமம் = துன்பம் துடைத்தவர் = நீக்கியவர் முற்கால உரை: துன்பத்தை நீக்கினவர் சிநேகத்தை எழு பிறப்பிலும் நினைப்பார் பெரியோர். தற்கால உரை: தமக்கு ஏற்பட்ட துன்பத்தைப் போக்கினவர்களின் நட்பை உயர்ந்தோர்கள் வாழ்வின் எல்லா நிலைகளிலும் மறக்காமல் போற்றி வாழ்வார்கள். புதிய உரை: வாழ்க்கையில் வளர்ச்சி பெற இரும் பொத்த மனக் கிளர்ச்சியுடன் முயல்பவர்கள், ஒவ்வொரு முறையும் தனது துன்பம் நீக்கி உதவியவரை நினைத்து, எழுச்சி பெறுவார்கள்.