பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா - - - 114. தக்கார் தகவிலார் என்பது அவரவர் எச்சத்தால் காணப் படும். பொருள் விளக்கம்: தக்கார் = நடுவுநிலையில் நடக்கும் அறிஞர் தகவிலர் - நடுவுநிலை பிறழ்ந்த ஒழுக்கம் இல்லாதவர் (இழிஞர்) என்பது = என்று அறிவிக்கும் சிறப்பானது அவரவர் எச்சத்தால் = அவரவருடைய உண்மையாலும் (சொல்லாலும்) நோக்கம் உள்ள செய்யத்தக்கக் காரியத்தாலும் காணப்படும் = அறியப்படும். சொல் விளக்கம்: தக்கார் = அறிஞர் தகவிலார் = நடுநிலை தவறிய ஒழுக்கம் இல்லாதவர் (இழிந்தவர்) எச்சம் = உண்மை, காரியம், செய்யத்தக்கது, சரீரம், மகன் முற்கால உரை: நடுநிலைமை உடையவர் நடுவுநிலைமை இல்லாதவர் என்பது சந்ததியாற் காணப்படும். தற்கால உரை: ஒருவர் தகுதி உடையவர் என்பதை அவரது புகழாலும் தகுதியில்லார் என்பதை அவரது இகழாலும் அறிக. புதிய உரை: நடுவு நிலை காக்கும் அறிஞர், நடுவுநிலை தவறிய ஒழுக்கம் இல்லாதவர் என்பதை அவரது (அன்றாட) சொல், செயல், வாழ்க்கை மூலமாகவே மற்றவர்களால் அறியப்படும். விளக்கம்: எச்சம் என்பதற்குச் சந்ததி என்றும், எஞ்சி நிற்பது என்றும் பொருள் கொண்டிருக்கின்றனர். இங்கே நான் எச்சம் என்பதற்கு உண்மை, காரியம் என்று இருக்கும் பொருளைப் பின்பற்றி யிருக்கிறேன். உண்மை என்பது நினைவும் சொல்லும் காரியம் என்பது செயலும் முயற்சியும். அவைதாம் ஒருவரைத் தக்கிவர் தகாதவர் என்று பிரித்துக் காட்டும். ஒருவரது புகழை வைத்து அவர் நடுநிலையாளர் என்றோ, பெற்ற குழந்தைகளை வைத்தோ கணக்கிடுவது கடினமாகும். காந்தியின் குழந்தைகளை வைத்து காந்தியின் பெருமையைக் கூறிவிட முடியாது என்பது போல. * ஆகவே, ஒருவரது பெருமைக்கும் புகழுக்கும் அவரது சொல்லும் செயலுமே சாட்சியாக மாட்சியாக விளங்குகிறது.