பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 17() டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா I 122. காக்கப் பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனின் ஊங்கு இல்லை உயிர்க்கு பொருள் விளக்கம்: அடக்கத்தை மன ஒழுக்கமாகிய அடக்கத்தை பொருளாக உடல்போல (உடலாகவே) காக்க காக்க வேண்டும் அதனின் அப்படி உடலைக் காக்கிறபோது ஊங்கு இல்லை அதைவிட உயர்ச்சியும் மேம்பட்டதும் எதுவும் இல்லை. உயிர்க்கு ஆக்கம் - அதுவே சீவனாகிய காற்றாகிய உயிருக்கு எழுச்சியையும் வாழ்வையும் உண்டு பண்ணும். சொல் விளக்கம்: யி + - o • * + * == - * #@ T, - # F- ^1 \ Q), .ெ உயிர் - சிவன், காற்று, ஆன்மா; ஊங்கு = உயர்ச்சி, மேம்பாடு, மிகுதி: o o 3-(CN ~ # + r; !, ஆக்கம் - எழுச்சி, விருத்தி, வாழ்வு, பெருக்கம் முற்கால உரை: மக்களுயிர்க்கு அடக்கத்தினும் சிறந்த செல்வமில்லை. தற்கால உரை: அடக்கத்தைச் சிறந்த பொருளாக எண்ணிக் காக்கவேண்டும். அடக்கத்தைவிட, மேலான ஆக்கம் தரும் செல்வம் எதுவும் இல்லை. புதிய உரை: உடல்தான் உலகின் முதல் பொருள். வாழ்வுக்கு ஆதாரம் உடலைக் காத்தால்தான் உயிர் வாழும். ஆன்மா மேம்பட்டிருக்கும் மன ஒழுக்கமாகிய அடக்கத்தை, உடலை வளமாகக் காப்பது போலக் காத்திருந்தால்தான். அதனுள் வாழ்கிற சீவன் எழுச்சி பெற்ற எல்லாச் சக்திகளையும் அளிக்கும். விளக்கம்: உயிருக்கு எழுச்சி உடலுக்கு வளர்ச்சி, இவை இரண்டும்தான் அடக்கத்தை வளர்த்துக் காக்கும் ஆற்றல் மிகு சக்தியாகும். அதனால்தான் உயிருக்கு ஆக்கம் எதுவும் இல்லை. அதற்கு ஒரே வழி உடலைப் பேணுங்கள். வலிமையான உடலில் வலிமையான மனம். ஆகவே, [ [☽ ❍Ꭲ ←%{ { பக்கத்திற்கு உடலைப் பொறுப்பாகக் காக்கவும் என்று 2 வது குறளில் வலியுறுத்துகிறார்.