பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o H υ. # # ILI IT 180 டாக்டர் எஸ். நவராஜ் செல்லை சொல் விளக்கம்: கதம் = கோபம், வலிமை; செவ்வி = ஏற்ற சமயம் அறம் = ஒழுக்கம்; உழைத்து = வருந்தி ஈட்டுதல்

முற்கால உரை: கற்றடங்க வல்லவனாயிருப்பவன் சமயத்தைத் தருமக் கடவுள் பார்க்கும். தற்கால உரை: சினம் இல்லாமல் அடக்கத் தோடு ஆற்றல் பெற்று விளங்குபவரை, அறமானது தழுவி நிற்கும். புதிய உரை: சுற்றுப்புற சூழ்நிலைகள் ஏற்படுத்தும் கோபத்தை அடக்கி, அதனால் ஏற்படும் அனுபவங்களைக் கற்று, கால நேரம் அறிந்து ஒழுக்கம் காக்கும் அறனே - அடக்கத்திற்குப் பெருமை சேர்க்கிறான். - விளக்கம்: சுற்றுப்புறச் சூழ்நிலைகள்தான் ஒருவனைச் சுற்றிப் பாடாய்ப் படுத்துகின்றன. கேடனாகவும் மாற்றுகின்றன. எதிர்மறையாக காரியங்கள் நடப்பதுதான் இயற்கைக்குரிய இனிய தர்மம் ஆகும். எதிர்மறை நிகழ்ச்சிகளைக் கண்டு கோபப்படுவதும் கொந்தளிப்பதும் மனிதனுக்கு உரிய மாறாத குணமாகும். எந்த நிலையிலும் ஏற்படுகிற கோபத்தைத் தவிர்த்து, தன் வலிமையை அடக்கி, ஏற்படுகிற நிகழ்ச்சிகளில் இருந்து பாடங்களைக் கற்று, அதன்வழி ஒழுக்கம் காத்து, காலம் நேரம் பாராமல் அடக்கத்துடன் வாழ்கிற ஆற்றலே பேராற்றல் ஆகும். மனப் பகையான கோபத்தையும், உடல் பகையான வலிமையையும் வென்று வாழ்வதே அடக்கமுடைமையின் அளவரிய பெருமை என்று இந்த அதிகாரத்தை முற்றுப்படுத்துகிறார் வள்ளுவர் பெருமான் அவர்கள். தெய்வம் என்றார்.