பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா கொண்பவன்தான் மனிதரில் மேலான புனிதன் என்பதால், அந்த உண்மை கூறும் நெஞ்சுரம் கொண்டவரே உரவோர் என்று 6 வது குறளில் பாடியதை இந்தக் குறளிலும் வற்புறுத்திக் கூறுகின்றார். பொய் சொல்லாதது பேராண்மை, செய்த தவறைத் திருத்திக் கொள்வது சீராண்மை, உண்மையை ஒத்துக் கொள்வதுதான் உலகிலேயே நேராண்மை என்ற குறிப்பை இந்தக் குறளில் கூறுகிறார். 140. உலகத்தோடு ஓட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார் பொருள் விளக்கம்: உலகத்தோடு - ஆகாயம், பூமி, காற்று, நீர், வெப்பம் ஆகிய இயற்கைத் தன்மையோடு ஒட்ட ஒழுகல் = மனதாலும் உடலாலும் சேர்ந்து வாழ்வதே ஒழுக்கமாகும் அறிவிலாதார் = அப்படி வாழத் தெரியாதவர் எல்லாம் மூடராவார் பலகற்றும் - மேலும் பல படிப்பறிவு பட்டறிவு பெற்றிருந்தாலும் கல்லார் = இயற்கையோடு வாழத் தெரியாதவர். சொல் விளக்கம்: கல்லார் = கீழ்மக்கள், மூலர், கற்றலைச் செய்யாதார், அறிவிலார் - மூடர் உலகம் - பூலோகம், ஆகாயம், இயற்கை முற்கால உரை: உலகத் தோடு பொருந்த ஒழுகுதலைக் கல்லாதவர் பல நூல்களையும் கற்றாராயினும் அறிவில்லாதார். தற்கால உரை: கூடிவாழும் மக்களுக்கேற்ப நடந்து கொள்ளத் தெரியாதவர்கள், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் உலக நடைமுறையைக் கல்லாதவரே ஆவார்கள். புதிய உரை: இயற்கையுடன் ஒருங்கிணைந்து ஒன்றி வாழத் தெரியாதவர்கள் எவ்வளவு கற்றிருந்தாலும் அவர்கள் அறிவில்லாத கீழ் மக்களே ஆவார்கள்.