பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 142. அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரில் பேதையார் இல் பொருள் விளக்கம்: அறன்கடை - மனம் மற்றும் உடல் ஒழுக்கத்தில் கடைநின்றார் - தாழ்ந்த அற்பமானவர்கள் உள்ளல்லாம் - நினைவு எல்லாம் பிறன் கடை நின்றார் இல் = மனம் வேறுபட்டவன் மனம்போன போக்கில் போய் பேதையாரில் அறிவற்றவர்களாகவே ஆகிவிடுகிறார்கள். சொல் விளக்கம்: அறன் = ஒழுக்கமானவன்; கடை - தாழ்ந்த, அற்பமான உள் - நினைவு; பிறன் - மனம் வேறுபட்டவன்; இல் = இடம். முற்கால உரை: காமம் காரணமாக, பாவத்தின்கண் நின்றார் எல்லாருள்ளும், பிறனில்லாளைக் காதலித்து, அவன் வாயிற்கண் சென்று நின்றார் போல பேதையாரில்லை. F தற்கால உரை: பிறன் மனையாளைக் காதலிப்பவர். மற்றைய பாவங்களைச் செய்பவரினும் பெருமடையர். புதிய உரை: ஒழுக்கத்திலே தாழ்ந்து போனவர் எல்லாம், மனம் மாறிய பகைவன் வீட்டில் போய் நிற்கிற அறிவில்லாத அற்ப மனிதர்களாக ஆகிவிடுகின்றார்கள். விளக்கம்: ஒழுக்கத்திலே தாழ்ந்து போகிற ஒருவன், வேறு எங்கு போக முடியும்? பகைவனாக இருந்தாலும், மனம் வேறுபட்டவனாக இருந்தாலும், அவனிடம் போய் ச் சேருகிற, அறிவில்லாத வனாகத்தானே இருக்கமுடியும்! காக்கை உகக்கும் வேப்பம் பழம் என்பதுபோல; கழுவிளை நயக் கும் கழுகினைப் போல, ஒழுக்கமில்லாதவராகிய பகைவரிடத்துத் தானே போகச் செய்யும் நல்லோரிடம் செல்லும் வாய்ப்பையே தாழ்ந்த மனம் தராது என்பதால், ஒழுக்கத்தில் தாழ்ந்தவர் நினைவுகள், தன் வீட்டு மேன்மையை நினைக்காது. பிறர் வீட்டை நாடுகிற பேதமையைத் தான் தரும். அறனல்லாத பிறன் வாழ் வின் மேன்மையை எட்ட முடியாது என்று இரண்டாவது குறளில் கோடிட்டுக் காட்டுகிறார்.