பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா முற்கால உரை: பிறன் மனையாளைச் சேராதவர்களே நன்மைக்கு உரியவர்களாவார். தற்கால உரை: பிறன் மனையாளைக் காதலியாதவர் எல்லா நன்மைகளையும் பெறுதற்கு உரியர். புதிய உரை: பிறருக்குரிய பெண்ணைக் கலந்திட முயலாதவர், எல்லாவிதமான உயர்நல அழகுகளை எல்லாம் சிறப்புறப் பெற்று இன்பங்களுடன் வாழ்வர். விளக்கம்: பெண்களால் மனநலம் மட்டுமல்ல, உடல் நலமும் கெடும். பெண்ணை நாடுதல் என்பது பெரும் பழிக்கு மட்டுமன்று, பேரச்சத்திற்கும், பெரும் துன்பத்திற்கும் இட்டுச் செல்லும் புதைகுழி வழியாகும். அதுவும் பிறரது உரிமைப் பெண்களை எண்ணி விட்டாலோ எண்ணும் போது பயம், இணையும்போது பயம், இணைந்த பின் பயம் என்று எல்லாப் பயங்களுக்கும் வயப்பட்டு, மனம் புண்பட்டு, உடல் புண்பட்டு வாழ்க்கையும் மண்பட்டுப் போகிறது. அதனால்தான் பிற பெண்ணை தயக்கும்போதே, அக அழகு, முக அழகு, நினைவழகு, செயல் அழகு, புகழ் அழகு எல்லாமே பாழாகிப் போகிறது என்பதைக் குறிக்கவே நலக்குரியார் என்றார். உட்பகையிலே முதல் பகை தான் காமம். காமத்தின் வழிதான் குரோதம், மோகம், மதம், மாச்சரியமம் வருகிறது என்பதால், முதல் பகையை அழித்தாலே முற்றிலும் அழகு பெற்று வாழ முடியும் என்பதை 9 வது குறளில் கூறுகிறார். 150. அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று பொருள் விளக்கம்: அறன் வரையான் - ஒழுக்கத்தைக் காக்காதவன் அல்ல செயினும் பிற தீவினைகளைச் செய்தாலும் பிறன் வரையான் = பிறரது மனையாளின் பெண்மை நயவாமை = புணர்வை விரும்பாது இருப்பது நன்று அதுவே அவர்க்கு நன்மை தருவதாகும்.