பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 2O7 151. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. பொருள் விளக்கம்: அகழ்வாரை தொடர்ந்து தன்னைத் தோண்டிக் கொண்டிருப்பவரை தாங்கும் = விழுந்து விடாமல் ஆதாரமாக விளங்கும் நிலம்போல - பூமியைப் போல இகழ்வார் பகைவரையும். தொடர்ந்து தம்மை விடாமல் இகழ்கின்ற பொறுத்தல் = நோன்மை தவம்போல பொறுத்து மன்னிக்கிறவர் தலை = சிறந்தவராக, உயர்ந்தோராக ஆகிறார். சொல் விளக்கம்: தாங்கு = ஆதாரம், சகித்தல், ஆதரித்தல், விளங்கும் நிலம் = பூமி, இகழ் = நிந்தி; இகழுநர் = பகைவரை பொறுத்தல் = நோன்மை, தவம், மன்னித்தல் தலை = உயர்ந்தோன், சிறந்து; வார்தல் = ஒழுகுதல், நீளுதல் முற்கால உரை: தன்னை அகழ்வாரை விழாமற் தாங்கும் நிலம் போலத் தம்மை அவமதிப்பாரைப் பொறுத்தல் தலையாய அறம். தற்கால உரை: சுமையாகித் தோண்டுவாரையும் தாங்கும் நிலம்போல, இகழ்வாரையும் பொறுத்துக் காத்தல் சிறப்பு. புதிய உரை: தொடர்ந்து தன்னைத் தோண்டித் தொலைப்பவர்க்கும் ஆதாரமாக இருந்து, ஆதரிக்கும் பூமியைப் போல, தன்னைத் தொடர்ந்து இகழ்கிற பகைவரையும் மன்னிப்பதை தவமாகச் செய்பவர், உயர்ந்தோர் ஆகிறார். விளக்கம்: ஒருமுறை தோண்டுவது, சிறிதளவு தோண்டுவது. இதற்கெல்லாம் ஏற்றல் பொறுத்தல்தான். அது பொறை உடைமை ஆகாது. பொறு + ஐ = பொறுமை பொறுத்தலில் உயர்நிலை பொறை. பொறுத்தலில் முதல் நிலை பொறுமை.