பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா Li Li Li'il 1, 1 1653, L138051'1 1 (Stress, strain, Tension) a Lo Joostill I எல்லாமே குறைந்து விடுகிறது. உடலுக்குப் புதுமையான புத்தெழுச்சியும், மனத்துக்கு, மேம்பாடு மிக்க புத்துணர்ச்சியும் ஏற்படுகிறது. மன உலைவை மாற்றுகிற ஆற்றல், மன்னிக்கும் மனதுக்கு மறக்கும் மனதுக்கு அதிகம் உண்டு. ஆகவேதான், துணையும் புகழ் என்றார், அதாவது ஆக்கப் பொருளாகிய 'உம்' என்பதை வைத்துத் துணை புகழ் என்று இரண்டும் பெருகி வரும் என்று 6ஆம் குறளில் கூறுகின்றார். 157. திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று பொருள் விளக்கம்: திறன் அல்லது = காரணம் அல்லது கூறுபாடு இன்றி அல்பிறர் செய்யினும் = பிறர் தீவினை செய்தாலும் நோநொந்து அதனால் வேதனையும் பலவீனப்பட்டாலும் அறன் - ஒழுக்கம் உலாவருகிற அகத்தை உடைய அறனானவன் அல்ல செய்யாமை - அவர்க்கு எதிராக தீவினை செய்யாமையானது நன்று - (அதுவே) நல்வினையாகும் சுகமாகும். சொல் விளக்கம்: திறன் - காரணம், கூறுபாடு, வழி; நோ - பலவீனம், வேதனை, சிதைவு: நொந்து தூண்டு; அல்லது தீவினை அல் - மயக்கம்; அறன் - அகம், ஒழுக்கம், நன்று அறன் - ஒழுக்கமானவன் முற்கால உரை: பிறர் செய்யத்தகாத கொடியவைகளைச் செய்தாலும் தான் வருந்தி அறமல்லாதவைகளைச் செய்யாமை நன்றாகும். தற்கால உரை: கீழான தீமையைப் பிறர் செய்தாலும் மனம் மறந்து, முறையற்றுத் தண்டிக்காமை நன்மை தரும். புதிய உரை: காரணமின்றி, அறியாமை மயக்கத்தால் பிறர் தீவினை செய்ய, அதனால் வேதனைப்பட்டு மனச்சிதைவு ஏற்பட்டாலும் கூட ஒழுக்கவானாகிய அறன், அதற்கான எதிர் வினையைச்

- == செய்யமாட்டார்