பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா விளக்கம்: விழுபேறு என்று தான் எல்லோருமே பொருள் கண்டிருக்கின்றனர். இங்கே நான் விழுப்பு என்றும், விழுப்பு என்றால் உலக நடைக்கு மாறானது, ஒழுக்கமின்மை (அநாசாரம்) என்றும் பொருளைக் கொண்டிருக்கிறேன். அன்மை என்றால் வேறாதல் என்ற பொருள் கூறியிருக்கின்றார்கள். அன்மை என்றால் தீமை என்றும் ஒரு பொருள் உண்டு. எல்லோரிடத்திலும், அவர் நண்பர் அல்லது பகைவர் அல்லது புதியவராகவும் இருக்கலாம். என்கிற வித்தியாசம் இல்லாமல், பொறாமை கொள்கிற பண்பைக் கொண்டிருந்தால், அதை விட ஒழுக்கமற்ற செயல், உலக வழக்கத்திற்கும் மாறான நடத்தை, அழுக்கான வழக்கம் வேறு எதுவுமே இல்லை என்று பொறாமையின் கேடு பற்றித் தெளிவாக வள்ளுவர் விளக்குகிறார். 2 வது குறளில் பொறாமையின் பொல்லாங்கு பற்றிய குற்றம் பற்றிக் கூறுகிறார். 163. அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் பேணாது அழுக்கறுப் பான் பொருள் விளக்கம்: அறன் ஆக்கம் = ஒழுக்கமான வாழ்க்கையை வேண்டாதான் என்பான் = விரும்பாதவனே பிறனாக்கம் = பிறரது எழுச்சியால் பெறும் வாழ்க்கையை பேணாது = போற்றாது அழுக்கறுப்பான் பொறாமைப்படுபவனாக விளங்குகிறான் சொல் விளக்கம்: அறன் - ஒழுக்கம், ஆசாரம்; ஆக்கம் = வாழ்வு, எழுச்சி, விருத்தி போணாமை = போற்றாமை, பேணார் = பகைவர் முற்கால உரை: மறுமைக் குத் தருமமும், இம்மைக்குச் செல்வமும் வேண்டாதவன், பிறன் செல்வங்கண்டு பொறாமை கொள்வான். தற்கால உரை: பிறர் முன்னேற்றத்தை வளர்க்காமல் கெடுப்பவர் அறம் தரும் முன்னேற்றத்தை இழப்பர்.