பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா - - н - சொல் விளக்கம்: அஃகிய அறிவு = நுண்மதி; வெறிய = பித்தனைப் போல செயிர் = சினம் முற்கால உரை: யாவரிடத்தும் பொருளை இச்சித்துத் தீமை செய்தால், மிகுந்த அறிவின் பயன் என்ன? தற்கால உரை: எவரிடத்தும் பழிக்கும் வெறிச் செயலை ஒருவர் செய்வாராயின், அவர்தம் நுணுகி விரிந்த அறிவால் என்ன பயன்? புதிய உரை: நுண்மதி கொண்ட பேரறிவாளரும், பிறருக்குரியனவற்றை விரும்புகிறபோது பித்தர்போல வெறிச் செயலில் ஈடுபடுவார் அப்போது அவர் பெற்ற அறிவு என்னாகும். எப்படி உதவும்? விளக்கம்: - அவா அதிகமாகும்போது அறிவு முதலில் குறைந்து கொண்டே வந்து, பிறகு மறைந்து போகும். தீய நினைவுகள் தீயாய் வளர்ந்து தூயனவற்றையெல்லாம் எரித்து விடும். தீமையைத் தடுப்பதற்காகவே அறிவு இருக்கிறது. விரிகிற அறிவு, எரிகிற ஆசைக்கு சாமரம் வீசினால் நிலைமை மேலும் மோசமாகி விடாதா? அதனால்தான் அநியாய ஆசையை அடக்கித் தடுக்காத அறிவு எதற்கு? அந்த அறிவால் பயன்தான் என்ன? புறத்துறவு என்பது புலத் துறவு. அகத்துறவு என்பது மனத் துறவு. அதுதான் ஆசைத் துறவு. எத்தனைதான் அறிவு நிறைந்திருந்தாலும் ஆசையென்று வந்து விட்டால், மோசமான நினைவுகளே முந்திக் கொண்டு மனத்தை மூடிவிடும். ஆசைப் படப்பட ஆய் வரும் துன்பங்கள் ஆசை விட விட ஆனந்தமாமே என்றார். அதனால்தான் வெஃகாமை என்றார். விருப்பப்படாமையை வெறுப்பு என்றார். பிறருடமை விரும்பாத பேராண்மை என்று மனத்தை அடக்கும் மகிமையை 5 வது குறளில் அழகாக எடுத்துரைக்கின்றார்.