பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 194. நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் பண்பில்சொல் பல்லார் அகத்து பொருள் விளக்கம்: பல்லார் அகத்து = அறிவாளர்கள் மனம் (சீவன், உடல் ) புண்படும் படியாக பயன்சாரா = அர்த்தமற்ற பண்பில் சொல் = பண்பற்ற சொற்களைப் பயமின்றி பேசுகிறவனுக்கு நயன்சாரா = மகிழ்ச்சியான உறவை இழப்பது நன்மையின் நீக்கும் = கிடைக்க வேண்டிய மன அமைதி, மேம்பாடு முதலியவற்றை அழித்துவிடும். சொல் விளக்கம்: நயன் = நன்மை, மகிழ்ச்சி, உறவு, நீதி சாரா = ஒத்துப் போகாத நன்மை = நற்குணம், நன்மார்க்கம், அமைதி, சுகம், மேம்பாடு அகம் = சரீரம், சீவன், ஆன்மா, மனம். முற்கால உரை: பயனோடு படாத பண்பில் சொற்களை ஒருவன் பலரிடைச் சொல்லுவானாயின் அவை அவர்மாட்டு, நீதியொடு படாவாய், அவனை நற் குணங்களின் நீக்கும். தற்கால உரை: பயனோடு பொருந்தி வராத பண்பற்ற சொற்களைப் பலரிடத்தும் சொல்லுதல், அறத்தொடு பொருந்தி வராதவையாகி, அவனை நன்மையிலிருந்து நீங்கிப் போகவே செய்யும். புதிய உரை: அறிவுள்ளோர் (சபையில்) மனத்தைப் புண்படுத்துகிற பயனற்ற சொற்களைப் பேசுகிறவன், தன் மன அமைதியை இழப்பதுடன் தன் வாழ்க்கையில் கிடைக்கிற மேம்பாடு, சுகம் போன்ற எல்லாவற்றையும் இழந்து அழிந்து போகிறான். விளக்கம்: பல்லார் என்பது பலராகிய பொதுமக்கள் என்பதை விட, பலவற்றிலும் துண்மைமதி பெற்றிருக்கும் அறிவாளர்களையே இந்தச் சொல் குறிக்கிறது. பண்புடையவர்கள் உடல் மென்மையானது. மனமோ திண்மையானது. ஆன்மாவோ அதிக ஆற்றல் மிக்கது. அப் படிப் பட்டவர்களின் உடல், மனம், ஆன்மாவை குறிக்கவே, அகத்து அதாவது அகம் என்று குறித்தார்.