பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை புதிய உரை: வாழ்வின் பேறுகளை நுட்பமாய்ப் பார்க்கின்ற ஞானம் பெற்றவர், பிறருக்குச் சிறந்த வாழ்வை வழங்காத பொருளற்ற சொற்களை சொல்லவே மாட்டார். விளக்கம்: வாயிலிருந்து வார்த்தெடுக்கப் படுகின்ற பொருள் மிகுந்த ஒலி தான் வார்த்தை என்று பெயர் பெறுகிறது. ஆகவே, அகத்தின் வழியாக விளங்கும் வாயானது, முகத்தின் முக்கிய உறுப்பாக இருந்து, பணியாற்றுகிறது. பேசுகின்ற சொற்கள் பல பிரிவுகளை உடைத்தாயிருக்கின்றன என்று பேரறிஞர்கள், மிக நுட்பமாக ஆய்ந்து கூறியிருக் கின்றார்கள். 1. பயனற்ற சொல்லின் பெயர் அனர்த்தம். அனர்த்தம் என்பது வட சொல். பொருளற்ற, தீங்குபயக்கும் தன்மை கொண்டது. 2. பலர் அறிகின்ற, சொல்லின் பெயர் பெருஞ்சொல். 3. மறைவாகக் கருத்துக்களைத் தரும் சொல்லின் பெயர்: இடக்கரடக்கல் கூச்சத்துடன். 4. நம்பாத மெல்லிய சொல்லின் பெயர் உல்லாபம். அதற்கு நலிந்த சொல் என்று பொருள். 5. கொஞ்சிப் பேசும் சொல்லின் பெயர், மழலை மிழற்றல். 6. இழிவான மக்கள் சொல்லும் சொல்லின் பெயர். அவப்பிரஞ்சம். இப்படி, சொற்களின் தரமும் திறமும் அறிந்து ஞானவான், தான் சொல்கிற சொற்களைத், தனது பொறி உணர்வுகளைக் கட்டுப் படுத்தி, உணர்ச்சிவசப் படாமல், தெளிவாகவே பேசுவார்கள். இல்லையேல், அவரது வாய்மொழி, இழிந்தவர்கள் பேசுகிற பேச்சுக்கு ஈடாகி விடும். அதனால் தான் ஆயும் அறிவினார் என்றார். நுட்பமாய் ச் சிந்திக்கும் இந்திரனாளர். இந்திரியங்களான ஐம்புலன்களைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் பெருந்திரனாளர். அவர் பிறருக்கும் தனக்கும் தேவைப் படுகிற புகழ், புகழைத்தரும் கல்வி, கல்வியைக் கற்க உதவும் தேக மன வலிமை, வலிமை தருகிற வெற்றி, வெற்றி வழங்குகிற துணிவு. துணிவுடன் வாழ்கிற வாழ்க்கை. அந்தத் தெளிவு தருகிற நோயில்லாத வாழ்வும்