பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள்-புதிய_உரை_ - 301 சமு = போர்ப்படை, தாயம் உறவு. ஆகவே, ஒருவருக்கொருவர் உதவி வாழ்ந்த காலம் மாறி, எல்லோரும் சமம். சமமான உறவு வேண்டும் என்பதற்காக சம + தாயம் ஆனார்கள். காலம் செல்லச் செல்ல, சமுதாயத்தில் சச்சரவுகளும் குழப்பங்களும் கூடி வரவே, சமுதாயம், வீரிழந்தது. சமுதாயம் தன் கூரிழந்து, குமுதாயம் ஆயிற்று. மனக் குமுறல்களே மனிதர்களை ஆளத் தொடங்கியபோதுதான், தீவினைகள் போன்ற வேண்டாத வினைகள், பூகம்பமாகக் கிளம்பின. அந்தக் காலக் கட்டத்தில்தான் போரும் பூசலும்; சண்டைகளும் சச்சரவுகளும்; கூடிவர, நல்வினைகள் மாறி, வல் வினைகளாகி, கடைசியில் சொல் வினைகளாக வடிவெடுத்தன. யற்கையளித்த கொடையானது அன்புமனம், ஆதரவு குலும், இவற்றோடு ஒப்புரவாகி, ஒப்புறவாக வாழுங்கள் என்று மக்களுக்கு விளக்கி, வழிகாட்டவே, இந்த அதிகாரத்தைத் தீவினை அச்சத்திற்குப் பிறகு வைத்திருக்கிறார். மக்களுக்கிடையே ஒற்றுமையை வளர்ப்பதற்காக, மக்கள் மனங்களிலே வேற்றுமையை நீக்கிடும், ஆற்றல்களைக் காட்டி அமைதி வாழ்க்கையை வாழ்வதற்கு உதவுகிறார் வள்ளுவப் பெருந்தகை.