பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 3()の அமையாதவர்களுக்கு உதவுகிற எண்ணமே எழாது. தன் இயலாமையை நொந்து கொண்டிருக்கிற நெஞ்சம், பிறரை எண்ணுமோ? அரிய செயலைப் பண்ணுமோ? நல்ல உடல் மூலம் நிறைவாக இருக்கிற நல்ல மனம் தக்காரைத் தேடவும் தகுதியுடையார்க்குரிய தேவைகளைப் புரிந்து கொள்ளவும், அவர் மகிழும் வண்ணம் தமது பேராண்மையால், உதவவும் முடியும் என்று வள்ளுவர், உடலை வைத்தே இந்த உலகமும் உதவியும் என்கிறார். வேளாண்மை செய்தல் என்பதில், வேளாண்மை தருகிற கொடை, ஈகிற இன்பம், உதவுகிற உபகாரம். எல்லாம் அரிய செயல். அதுவே பேராண்மை என்பதைக் குறிக்க செய்தல் என்கிறார். பொருட்டு என்றால் மேம்படுதல். பிறர்க்கு உதவி மேம்படச் செய்து, தனது ஒப்புரவால் தானும் மேம்படுவதையே செய்தற் பொருட்டு என்றார். மாரி போல உதவ மனம் வேண்டும் என்றால், பேராண்மை மிக்க உடல் வேண்டும். அதன் மூலம் அரிய செயல் நிகழ்த்த முடியும் என்று 2 வது குறளில் வள்ளுவர் கூறுகின்றார். 213. புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற. பொருள் விளக்கம்: புத்தேள் = புதுமை நிறைந்த உலகத்தும் = உயர்ந்த மக்களிடத்தும் கூட ஒப்புரவின் = உலக முறைமையான சமமும் சமாதானமும் நல்ல பிற மற்றும் ஒப்புரவினால் கிடைக்கும் நன்மைகளைப் போல; ஈண்டும் = நிறைய பெறல் அரிதே பெறுவது அரிதானதாகும். சொல் விளக்கம்: புத்தேள் - புதுமை; உலகம் = உயர்ந்தோர், மக்கள், உலகு ஈண்டும் = நிறைய; நல்ல = நன்மை முற்கால உரை: தேவருலகத்தும் இவ்வுலகத்தும், ஒப்புரவு போல நல்லன பிறசெயல்களைப் பெறுதலரிது.