பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 23. ஈகை ஒரு சமுதாயத்திலே வாழ்கிற மக்களை, மூன்று நிலையாகப் பார்க்கலாம். தாழ்நிலை, சமநிலை, மேல்நிலை. சமுதாய வாசியான ஒருவர், தமக்குரிய அறிவு, பொருள், வசதி போன்றவற்றை அளவு கோலாக வைத்துப் பார்க்கிறபோது, அவருக்குக் கீழே தாழ்வான நிலைமையில் வதிபவர்கள்; தமக்குச் சமமாக, இணை நிலையில் வசிப்பவர்கள்; எல்லாவற்றிலும் தனக்கு மேலாக மேம்பட்ட நிலையில் விளங்குபவர்கள். நிலை வேறாக இருந்தாலும், ஒருவருக் கொருவர் . உறவாடவும், கொடுக்கவும், பெறவும் போன்ற காரியங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும். அப்போது, கொடுத்து வாங்கும் நிலையை, வளமான தமிழ்ச் சொற்கள், சுவையாகச் சொல்லிக் காட்டுகின்றன. தனக்குத் தாழ்வாக உள்ளவர்களிடம் ஒன்றைக் கேட்கிறபோது, கொடு என்று அதிகாரம் செய்வது ஒருநிலை. தனக்குச் சமமாக உள்ளவர்களிடம் ஒன்றைக் கேட்கிற போது தா என்று இயல்பான முறையில் கேட்பது ஒரு நிலை. தனக்கு மேலாக உள்ளவர்கள் ஒன்றைக் கேட்கிறபோது ஈ என்று சொல்லில் குழைவையும் நெளிவையும் காட்டிக் கேட்டது மூன்றாம் நிலை. இதையே ஈயென இரப்பது என்றும் சொல் வார்கள் 'பல்லெல்லாம் தெரியக் காட்டி, பருவரல் முகத்தில் தேக்கி, சொல் லெல்லாம் சொல்லி நாட்டி' என்று ஈயென இரத்தல் செய்பவரின் ஏங்கும் நிலையை விளக்குகிறார் ஒரு கவிஞர். ஈயெனக் கேட்கும்போது, இல்லையென்று மறுப்பதும், ஈவதை விலக்கும் இழிசெயலைச் செய்வதும் பாவம் என்று மக்கள் மத்தியிலே ஒரு மரபே உண்டு. ஆனால் ஈகிறபோதும், ஒரு மரபைக் காக்க வேண்டும்; மரியாதை செலுத்த வேண்டும். பெறுவோர் மனம் உறுத்தாதபடி பெருந்தன்மையுடன் தரவேண்டும் என்பதையே ஈகை என்று