பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

,330 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா வேட்கையை ஆற்றும் வேள்விதான் விருந்து படைத்தல். ரி தீர்க்கு ம் மருந்துதான் விருந்தோம்பல். அவ்வாறு உண்டி கொடுத்து உயிர்காக்கும் பெருமையுடையோரைத்தான் ஆற்றுவார் என்றார். ஆற்றுவார் என்றால் எடுத்த காரியத்தை விடாது தொடுத்து முடிப்பவர். ஆற்றல் என்பது அவர் மேற்கொள்கிற முயற்சி, அவர் மேற்கொண்ட முயற்சி பசி ஆற்றல். அதாவது பசியைத் தணித்தல். ஒரு வேளை உணவைத் தந்து, வாழ்த்தி வழியனுப்பி வைத்தால் அதன் பெயர் உதவி. அதற்கு வலிமையோ, ஆர்வமுள்ள முயற்சியோ தேவையில்லை. அதை ஒரு வேள்வியாகச் செய்ய வேண்டும் என்பதைக் குறிக்கவே, மாற்றுவார் என்றார். மாற்றல் என்றால், தீர்த்தல் என்று பொருள். தொடர்ந்து வருகிற பசியைத் தொலைத்து விட உதவுதல். மீண்டும் வந்தால் அதை விரட்டுகிற ஆற்றலை அளித்து உதவுதல். அதாவது அவர் வறுமையை விரட்டி, வளத்தைத் திரட்டித் தரும் வண்ணம், வேண்டிய பொருள் உதவிகளை அளித்தல். கொடையாளர் தருகிற மாற்றானது, பசியை வெல்லும் வலிமையை அளித்தல். வாழ்வாங்கு வாழ வரம் கொடுப்பது போன்ற சூழ்நிலைகளை உருவாக்குதல். அப்படி மாற்றுவாருக்குரிய வலிமையே பெருமை தரும் என்கிறார் வள்ளுவர். பின் என்றால் பெருமை. பெருமைக்குரிய ஆற்றல் பசி தீர்ப்பதல்ல. பசிப்பிணியை விரட்டுவது. மீண்டும் வந்து வதைக்காது விரட்டுவது. அப்படிச் செய்கிற காரியத்தின் வலிமையே பெருமை தரும் என்று 5 வது குறளில் மிக அற்புதமாக எடுத்துரைக்கின்றார். 226. அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி பொருள் விளக்கம்: அற்றார் = ஏதும் அற்ற வறியவர் அழிபசி = (உடல், மனம் ஆகியவற்றை) அழித்து விடுகிற பசியை தீர்த்தல் = அறவே அழித்து, ஒழித்து விடுகின்ற உபகாரம், (செய்கிற) அஃதொருவன் - அப்படிப்பட்ட ஒப்பற்றவன் பொருள் = தனது தலைமை ஆக்கம் பெறத்தக்க அளவில் வைப்புழிபெற்றான் வையகத்தில் நிலையான இடம் பெற்றவன் ஆகிறான்.