பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா வெளிப்படையாகக் கூற விரும்பாத வள்ளுவர், பொதுவான m .sり H *- - பொருள் விளங்கும் படி, வசையென்று கூறிச்சென்றார். எச்சம் பெறா விடின் அவன் துச்சம் தான். யாருக்கும் பயன்படாத எச்சில்தான். புகழ்தான் மனித வாழ்க்கையின் பேறு. அதைப் பெறுவதுதான் மனித ஆற்றலின் வீறு என்று, எட்டாவது குறளில், வசையான மாமிசத்தை, வளர்ச்சிக்காக உழைக்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றார். குறையான உடலும், குறைவான செயலும், ஒருவனுக்கு மனநிறைவைத் தாராது என்று இங்கே கோடிட்டுக் காட்டுகிறார். 239. வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா யாக்கை பொறுத்த நிலம். பொருள் விளக்கம்: இசையிலா - அருஞ்செயல் புரிய இயலாத யாக்கை = உடலை பொறுத்த நிலம் = ஏற்று சகித்துக் கொண்டிருக்கும் பதவியால், வசையிலா = குற்றம் இல்லாத வண்பயன் = உதவிடும் செயல்கள் எல்லாம் குன்றும் = குறைந்து மறைந்து போகும். சொல் விளக்கம்: வண்பயன் - கொடையால் வரும் பயன் நிலம் = பதவி, பூமி, வயல்; யாக்கை - உடல்; பொறுத்து சகித்த, முற்கால உரை: புகழில் லாத உடம்பைச் சுமந்த நிலம், பழிப்பில்லாத வளப்பத்தை உடைய விளையுள் குன்றும். தற்கால உரை: புகழுண்டாக வாழாதவரின் உடலைச் சுமக்கும் நிலம், தனக்கு இயல்பாக அமைந்த பழியில்லாத வளமான புகழ் ப் பயனினும் குறைதல் ஆகிவிடும். புதிய உரை: அருஞ்செயல் ஆற்ற இயலாதார் உடலானது வகிக்கின்ற பதவியும், அவரைச் சகித்துக் கொள்வதால், அந்தப் பதவியால் விளைகின்ற பயன்களெல்லாம் குன்றி வீணாகி விடுகின்றது.