பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/371

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா புதிய உரை: தம் ஆத்மபலத்தை வளர்த்துக் கொண்டு, அருள் பாலிப்பவர்கள், தமது சீவாத்மா கலங்குவது போன்ற பொல்லாங்குகளைச் செய்ய மாட்டார்கள். உடலுக்குத் தீமை பயப்பனவற்றைச் செய்ய மாட்டார்கள். விளக்கம்: மன்னுயிர் என்னும் சொல்லுக்கு உலகத்து உயிர்கள், நிலைபேறுடைய உயிர்கள் என்று பொருள் கொண்டிருக் கின்றார்கள். மன் என்ற சொல்லுக்குரிய பொருளாக, அதைக் கண்டிருக்கின்றார்கள். மன்னுயிர் என்றாலே ஆத்மா, சீவன் என்று பொருளிருக்கிறது. ஒம்புதல் என்றால், தீதுவராமல் காத்தல். அதாவது மனத்தை ஒருமைப்படுத்தி, உடலை நல்லொழுக்கத்தில் வயப்படுத்தி உயிர்க்காற்றை உடலுக்குள் நிரப்பி வளர்ப்பதையே, ஒம்புதல் என்றார் வள்ளுவர். நல் வினைகளாகக் கருணை மூலம் தயவு காட்டி, கடமையாற்றுகின்றவர்கள், தங்கள் சீவாத்மா சின்னா பின்னப்படுவதுபோல, சிதைந்துபோவதுபோல, வலிமையற்று வதங்குவது போன்ற நலிவுகளை உண்டாக்கும் இழிவான கீழ்த்தரமான காரியங்களைச் செய்யமாட்டார்கள். செய்யக்கூடாது. அதனால்தான் தன் உயிர் அஞ்சும் வினை என்றார் வள்ளுவர். உலகத்தில் வாழ்வதற்குரிய காரியங்களைச் செய்வது உடல். உடலுக்கு ஆணையிட்டு, அப்படிச் செய், இப்படி செய்யாதே என்று செய்யச் சொல்வது மூளை என்கிற மனம். இந்த உடல் மனம் இரண்டையும் நல்வழிப்படுத்த, ஆற்றுவிப்பதுதான் ஆற்றுமா என்கிற ஆத்மா என்கிற உயிர்க்காற்று. உயிர்க் காற்று உடலுக்குள் குறைகிறபோதுதான் ஆத்மவேதனைகள் அதிகமாகின்றன. உடலுக்குள்ளே இருக்கும் உயிர்க்காற்றை நிரப்ப இயலாமல், குறைப்பவைதாம் கெட்டகாரியங்கள். அதாவது உடலைக் கெடுக்கும் காரியங்கள். உடல் கெடும்போது, மனம் பாதிக்கப்பட, ஆத்மபலம் குறைய இப்படி அடுக் கடுக்காக அல்லல் ஏற்படாமல் தடுப்பதுதான் அறிவுடையோர்க் கழகு. இந்த அருமையான கருத்தைத்தான், வள்ளுவர் தன் உயிர் அஞ்சும் இன்னாதவைகளை இழைக்காமல்,