பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா - - so- - - வெறுமையாளராக நின்றாலும் சரி, அவருக்கு ஆன்மா உண்டு. அந்த ஆன்மாவே அரிய சக்தி. அகிலத்திற்கு ஆனந்தத்தை அளிக்கும் அற்புத சக்தி. தனக்குரிய ஆத்மா போலவே, அவருக்கும் உண்டு என்பதற்கும் மேலாக, தன் ஆத்மாவே அவர்தான் என்று நினைக்க வேண்டும் என்கிறார். அப்படி நினைக்கிற போதே, அருளுடைமையானது ஒருவருக்கு உண்டாகிவிடுகிறது. அதுவே துறவறத்தை அறவறமாக்கி, ஆன்மிகபலத்தை அதிகரித்து வாழ்விக்கிறது. என்று இந்த அதிகாரத்தை அலங்காரமாக முடித்து வைக்கிறார்.