பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/384

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 383 26. புலால் மறுத்தல் துறவறம் பூண்டவர்களுக்கு முதல் அறிவுரையாக அருளுடைமை வேண்டும் என்றார். பிற உயிர்களின் மேல் பிரியமாக இருப்பதை விட, பிற உயிர்களை வதைத்துண்ணும் வழக்கத்திற்குத் தங்களையும் ஆட்படுத்திக் கொள்ளக்கூடாது என்னும் அறவுரைக்காகப் புலால் மறுத்தல் என்னும் 2 வது அதிகாரத்தைத் தந்துள்ளார். ஆதிகாலத்து மக்கள், மிருகங்களோடு மிருகமாக வாழ்ந்த போது, மிருகங்கள் பசிக்கு இரையாகிப் போனார்கள். அவற்றை எதிர்த்து வீழ்த்திய போது, அவற்றின் தசைகளும் உடம்பும் தின்பதற்குச் சுவையாக இருந்ததால், மரக்கறி உணவிலிருந்து, மாமிசக்கறி உணவுக்குத் தங்களை மாற்றிக் கொண்டார்கள். மிருகங்களின் உடற் பகுதிகளை முதலில் புலால் என்றனர். பிறகு புலவு என்றனர். தீயில் சுட்டு சாப்பிட்டுத் திருப்தி அடைந்தவர்களுக்கு உணவில் ஈடுபாடு கூடக் கூட, புதிய உணவு முறைகளைக் கண்டு பிடித்தனர். பிறகு புலவு என்பதற்கு மேலும் ஒரு பெயர் புலாவு என்று பெயர் சூட்டினர். புலெவு என்றும் பிரியமாக அழைத்தனர். சமைத்தனர். புலாவு என்றால் ஊனோடு பக்குவப்படுத்திய உணவு. அறு சுவை உணவுகளில் ஒன்றாக, வந்த விருந்தினர்களை மகிழ்விக்கும் விருந்தாக ஊன்கறி உணவு அமைந்து போனதால், புலால் உணவைப் பெரும்பாலான மக்கள் உண்ணத் தொடங்கினர். காலங்காலமாகத் தொடர்ந்த, இந்தச் சமுதாய உணவுப் பழக்கத்தை மாற்றியமைத்த, மத நிறுவனர்கள் பலரும், முயன்று பார்த்து, முடியாது என ஒதுங்கி விட்டனர். - வள்ளுவர், இந்த வாழ்க்கை முறையைப் பார்த்தார். இல்லறம் பற்றி 200 குறட்பாக்களை எழுதிய வள்ளுவர். இந்த உணவுப் பழக்கத்தைப் பற்றி எதுவும் பேசவில்லை. துறவறம் பற்றிப் பேச வந்ததும், புலால் மறுத்தல் என்னும் கொள்கையைத் துறவிகளுக்குரிய இலக்கணமாகச் சொல்லி வைத்தார்.