பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/391

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா F அதிகமாகச் சாப்பிடுவது உள்ளுயிரைக் கலங்கடிக்கும். அவதிகளில் ஆட்படுத்திவிடும் என்பது உடலியலார்களும் உணர்த்தும் உண்மை. வயிறு நிறைந்ததும் கொஞ்சம் கண்ணயர வேண்டும் என்று எண்ணுவது மனித இயல்பு. அந்த மனித இயல்பைத்தான் வள்ளுவர் மிக அருமையாகப் படை கொண்டார் நன்று என்று சொல்கிறார். படை நன்று = தூக்கமே சுகம். படுக்கையே சொர்க்கம், என்று ஊன் கொண்டார், சுவை கண்டார் சொக்கிப் போகும் போது, மகிழ்ந்து போன மனத்தின் நிலை என்ன? வள்ளுவர் மிகச் சுவையாக, போல் என்று சொல்லுகிறார். போல் என்றால் புதர், பொந்து, மலைக்குகை, கள்ளவழி என்று அர்த்தம். ஊனுண்ட மனது புதர்போல, விளையாத நிலம் போல, கொடுமையான குகைபோல, இளகாத மலை வழிபோல ஆகிவிடுகிறது. ஏன்? அங்கே உற்சாகம் கொள்கிற உணர்வுகள் இல்லை. முனைப்பை உண்டாக்கும் முயற்சிகள் இல்லை. சீர்மையை ஏற்படுத்தும் சிந்தனைகள் இல்லை. களிப்பூட்டும் கற்பிக்கும் வேலைகளும் இல்லை. எந்த விதமான எழுப்புதல்களும் அந்தக் கறி உண்ட இதயத்தில் இல்லை. ஆகவே, நோயை மழுங்கடிக்கிற, மனத்தைக் கிறங்கடிக்கிற, உடலை நோகடிக்கிற, உற்சாகத்தைச் சாகடிக்கிற ஊன் உணவு தேவையில்லையல்லவா! என்று ஊன் உண்ட பிறகு ஏற்படுகிற உடல் வாதைகளையும், மனப் பூசல்களையும் மூன்றாவது குறளில் மிகத் தெளிவாகக் குறித்துள்ளார். 254. அருளல்லது யாதெனில் கொல்லாமை கோறல் பொருளல்லது தவ்வூன் தினல். பொருள் விளக்கம்: கொல்லாமெய் எனில் = எந்த உயிரையும் கொல்லாத உடல் என்பது பொருள் அருள் நல்ல உடலும், கருணை மனமும் ஆகும். அல்ல - அப்படியில்லாமல் கோறல் = பிற உயிர்களைக் கொன்று தவ் தன் நிலை பிறழ்ந்து