பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/403

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா சொல் விளக்கம்: கை = ஒழுக்கம்; கூப்பி = கரம் குவித்து உயிர் = பிராணி, விலங்கு முற்கால உரை: ஒருயிரையும் கொல்லாதவனை, புலாலையும் உண்ணாதவனை, எல்லா உயிர்களும் கை குவித்து வணங்கும். தற்கால உரை: ஒருவன் பிற உயிர்களைக் கொல்லாதவனாகவும், புலால் உண்ணாதவனாகவும் இருந்தால், அவனை உலகத்து உயிர்கள் எல்லாம் கை கூப்பி வணங்கும். புதிய உரை: பிற உயிர்களைக் கொல்லாதவனையும், அவற்றின் தசைகளை உண்பது தவறென வெறுத்து, வெட்கப்பட்டு ஒதுக்குபவனையும், ஆத்மாவை மதிக்கும் எல்லோருமே கை குவித்து வணங்குவார்கள். விளக்கம்: பிற உயிர்களைக் கொல்வதற்கு நினைவாலே அஞ்சுபவன், செயலாலே பிரியாதவன். அவன் சுய கட்டுப்பாடு உள்ளவனாக, தன்னைப் போல் பிற உயிர்களுக்கும் உள்பொருள் உண்டு என்பதால், தன்னைப் போல் பிறரையும் நேசிக்க வேண்டும் என்று ஒழுக்கத்தைக் கடைபிடிக்கும் உத்தமன் ஆகிறான். புலால் உண்ணாதவன் என்பதைவிட, புலாலை மறுத்தானை என்று வள்ளுவர் சொல்வதிலே, உள் அர்த்தமும் பொதிந்திருக்கிறது. புலால் என்பது ஊனாகிய மாமிசத்தசையாக இருக்கலாம். ஆனால் அது புன்மையான நஞ்சு (புல் ஆல்) எனக் கருதி, ஒதுக்குவதுதான், மறுத்தானின் மகிமையான செயலாகும். புன்மையான நஞ்சாகிய ஊனை நினைப்பதே தவறு என்றும், பிறருக்கு அதைக் கொடுக்காமல் இருக்கும். கொடாமையே பண்பட்ட பண்பாடு என்றும், ஊனைப்பற்றிப் பேசுதலும், வழங்குதலும், உண்ணுதலும் வெட்கப்பட வேண்டியவை என்றும் உள்ள மூன்று அம்சங்கள் தாம், மறுப்பது என்பதைக் குறிக்கிறது.