பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/429

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா குற்றப்படின் - பழுதுபட்டு, அவமானமடைந்து போனால்! வானுயர் = உடல் வலிமையிலும் பெருமையிலும் மேன்மையுற்று தோற்றம் = மற்றவர்க்கு மேன்மை மிகு தரிசனம் தந்தாலும், எவன் செய்யும் - அது என்ன பலனைத் தரும்? சொல்விளக்கம்: வான் = வலிமை, பெருமை; உயர் = மேன்மை, மேலேறு தோற்றம் = காட்சி, தரிசனம்; தன் = உயிர், ஆத்மா அறி = உணர்வு ; குற்றம்= குறை, பழுது, அவமானம். முற்கால உரை: தான் குற்றமென்று அறிந்த அதன் கண்ணே, தன் நெஞ்சு தாழுமாயின், ஒருவனுக்கு வான்போல் உயர்ந்த தவ வேடம் என்ன பயனைச் செய்யும்? தற்கால உரை: ஒருவன் தன் மனம் அறிய, தான் கொள்ளக் கூடாத குற்றம் கொண்டால், அவன் கொண்டுள்ள மிக உயர்ந்த கல்வி, பதவி, புகழ் முதலியவை என்ன பயன் செய்யும்? புதிய உரை: ஒருவன், தனது உடல் வலிமையிலும், வார்த்தைப் பெருமையிலும் பிறருக்கு மேன்மையான (தவவேட) தரிசனம் தந்தாலும், அவன் மனமும் உயிரும் தான் கொண்டிருக்கும் உணர்வுகளில் கீழ்மையடைந்து தாழ்ந்திருக்கும் போது, அவனது தரிசனம் என்ன பயனைத் தரும்? விளக்கம்: வானுயர் தோற்றம் என்கிறார் வள்ளுவர். அதுதான் பொய் வேடம். இழிகுலத்துப் பண்பாடுகளில் ஈடுபாடு கொண்டு, பொய்த்தவ வேடம் பூண்டு, போசனத்திற்காகப் புலம்பித் திரிகிறவர்களையே, கவர்ச்சிகரமான தோற்றம், காட்டுகிற காட்சி என்ன பயனைத் தரும்? ஞானமல்லாத தவவேடம். அது இந்த நாட்டிடை ஈனத்தையே செய்யும். உள்ளங்களில் ஊனத்தையே உண்டு பண்ணும். அப்படிப்பட்ட அவம் மிக்கத் தவவேடம் கொண்டவர் அதி கொலை வேடர் என்கிறார் திருமூலர். ஆடம்பர வேடத்தால் மற்றவர் நினைவைக் கவரல ாம். i. s 睡 軒 # - i. -: o r . o ஆனால், அந்த வேடத்திற்குள்ளே விளங்கி நிற்கிற உயிரும்,