பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/444

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 443 தவசியர்கள். தங்கள் பெருமையை வளர்த்துக் கொள்ள, -, _ _* == A- - - . -ெ - - - - - 〜、 ҹ — - H பிறருக்குக் கொடைகளை அள்ள அள்ளிக கொடுக.கவும் வேண்டாம். தங்களை எதிர்ப்பாரை, தரைமட்டமாக அழித்துப் போடும் அவமானமான காரியங்களை செய்யவும் வேண்டாம். பாவம் என்று பெரியோர்கள் பழித்து ஒதுக்கிய காரியங்களைத் தவசீலர்கள், தவிர்த்து வாழ்ந்தாலே போதும் என்கிறார். இந்தக் குறளுக்கு உரைதந்த பெரியோர்கள் எல்லோரும் மழித்தல் என்றால் முடியைக் கழித்து மொட்டை போட்டுக் கொள்ளுதல். நீட்டல் என்றால். சடாமுடியை நீட்டி விடுதல் என்றே பொருள் தந்திருக்கின்றார்கள். தவம் செய்பவர் என்றால் அந்தக் கோலம்தான் அழகுக் கோலம். அதை அலங்கோலமாக ஆக்குவோரும் அவர்கள் தாம். நீட்டல் என்றால் பெருங்கொடை, ஈதல் என்றே பொருள்கள் உள்ளன. மழித்தல் என்றால் மொட்டை ஆக்கல் என்று பொருள். மொட்டை ஆக்கல் என்றால், கூரின்மை ஆக்குதல். மற்றவர்கள் சிறப்பை அழித்தல் மிகுதியைத் தரைமட்டமாகுதல். ஆக, பிறரது வாழ்வை அழிக்கவும் வேண்டாம். வளம் கொடுப்பதாக நினைத்து, வாரி வழங்கவும் வேண்டாம். தவத்திற்கு வேண்டியதை மட்டும் கொள்ளுங்கள். தவத்தைக் கெடுப்பனவற்றைத் தள்ளுங்கள். வலிமையான துறவற வாழ்க்கையில் வெல்லுங்கள் என்று வள்ளுவர் இந்த அதிகாரத்தை முடித்துத் தொடர்கிறார்.