பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 3. நீத்தார் பெருமை இயற்கையின் இனிய கொடைகளை 45. இரண்டு அதிகாரங்களில் பதமாகப் பாடிய வள்ளுவர், உலக மக்களை ஒழுக்க வாழ்க்கையில் நடத்திச் செல்லும் வல்லவர்களாகிய நல்லவர்களை நமக்கு அடையாளம் காட்டுவதற்காக, மூன்றாவது அதிகாரத்தை அமைத்திருக்கிறார். # உடலை உருக்குலைக்கும் உணர்வுகளை, உந்துதல்களை, உயிரையும் பிழிந் தெடுக்கும் ஆசைகளை எல்லாம் புறந்தள்ளித் துறந்து விடுபவரை நீத்தார் என்றனர். (நீத்தார் = முற்றும் துறந்தவர்). அப்படிப்பட்ட ஆற்றல் மிகு அழிவு சக்திகளைத் தன்னிடம் அண்டவிடாது, ஞான மிகுதியால் எரியூட்டி நீற்றிடச் செய்யும் நெஞ்சுரம் கொண்டவரை நீற்றார் என்றனர். (நீற்றார் - எரியிட்டு துறந்தவர்). ஆதலால் இந்த மூன்றாம் அதிகாரத்தை நீற்றார் பெருமை என்றுதான் வள்ளுவர் தலைப்பிட்டிருக்க வேண்டும். பாட வேறுபாட்டாலும் பேச்சுப் பழக்கத்தாலும் நீத்தார் என்று வந்து விட்டது போலும். பெரிய உண்மை என்பதை பெருமெய் என்று கூறியதை பெருமை என்றும் மாறியிருப்பதையும் காண்கவும். வாழ்க்கையில் நிலையாமை என்பது உண்மையானால் அதனை வெற்றி கொண்டு விளங்குவது பேருண்மையான பேராண்மை அல்லவா? உடலைக் கெடுக்கும் குற்றங்களாகக் கருதப்படுபவை, நரை, திரை, மூப்பு, பிணி, சாவு, முதலிய ஆறும் மனத்தைக் கெடுக்கும் மாய்மாலப் பேய்களான காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்னும் ஆறும் நித்தம் நடத்தும் வாழ்க்கையிலே யார் நீக்கி வாழ்கிறாரோ, அவரே நீத்தார். இயற்கையை வெல்லுகிற இனிய கடவுளர்களை இங்கே நமக்கு வள்ளுவர் தரிசனமாகக் காட்டுகிறார்.