பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/500

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

199 திருக்குறள் புதிய உரை முற்கால உரை: இவை மக்களுக்கு இன்னாதன என அனுமானத்தால் அறிந்தவற்றை; பிறன் மாட்டுச் செய்தலை, மேவாமை

  • † H

துறந்தவனுக்கு வேண்டும். தற்கால உரை: ஒருவன் துன்பம் தருபவை என்று தான் கண்டு அறிந்தவற்றை, மற்றவனிடத்தில் செய்யாது இருக்க வேண்டும். புதிய உரை: கேடுபயக்கும் எனத்தன் ஆன்மா கண்டறிந்தவற்றை எல்லாம் தன் பகைவன் உடலையும் பாதிக்கும் வண்ணம் செய்கின்ற செயல்களில் பொருந்தாத மனம் வேண்டும். விளக்கம்: இங்கே ஒருவன் என்று சொல்லப் படுகிறவன், ஒழுக்கவானாகிய அறனையே குறிக்கும். அவன் இல்லறத்தில் இருப்பவன் ஆனாலும், கேடு அறங்களைத் துறப்பவனாகவே இருப்பதால், அவனைத் துறந்தவன் என்று அழைக்கிறார்கள். கேடுகளும், தீமைகளும் தனக்கு எவ்வளவு துன்பங்களைத் தரும் என்று தன் ஆன்ம சோதனையில் அவன் அறிந்து கொள்கிறபோது, தன்பகைவன் உடலுக்கும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் கண்ணும், கருத்துமாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் பிறன்கண் செயல் என்கிறார். பிறரது உடம்பில் தூசு படக்கூடாது என்பது போல, மாசுபடக் கூடாது. பிறனுக்குத்துன்பம் இழைப்பதில் மனம் பொருந்தக் கூடாது என்பதைக் கடுமையாகச் சொல்வது போலத், துன்னாமை வேண்டும் என்கிறார். 317. எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தான்.ஆம் மாணா செய்யாமை தலை பொருள் விளக்கம்: எனைத்தானும் எந்த வகையாலும் எஞ்ஞான்றும் எப்பொழுதும் யார்க்கும் = யாவருக்கும் மனத்து மனம்