பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/507

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

506 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா Ꮨyth 躍 முற்கால உரை: s _- - H - in o へ - - - 2-, i. o -- -*. H. அறங்கள எலலாம. ஆகய மlசயசை யாதெனறு வனவன, அஃது ஒர் உயிரையும் கொல்லாமையாம் அவற்றைக் கொல்லுதல், பாவச் செய்கைகள் எல்லாவற்றையும் தானே தரும் ஆதலால். தற்கால உரை: அறச்செயல் என்பது யாதென்றால் எந்த ஒரு உயிரையும் கொல்லாது இருத்தல் ஆகும். கொல்லுதல் என்பது அறம் அல்லாத செயல்கள் எல்லாவற்றையும் உருவாக்கும். புதிய உரை: புண்ணிய வாழ்க்கை என்பது, அரக்கத்தனமாகப் பிற உயிர்களைக் கொல்லாது இருப்பது ஆகும். அப்படிச் கொல்கிறபோது, அகிலத்தில் உள்ள, காம, குரோதங்கள் எல்லாம் வந்து அவனைச் சாடும். விளக்கம்: அகிலத்தில் உள்ள சகல பாவத்திற்கும் சாத்தான் போலத் தலைமை தாங்குவது காமம். காமம் ஏற்பட்ட உடனேயே, அவன் இந்திரியங்கள், அறுந்துபோன மின்சாரக் கம்பிகள் ஆகிவிடுகின்றன. அது பட்ட இடமும், தொட்ட இடமும், எரிந்து அழிவதுபோல, காமம் கொண்டதேகத்தில் அகக்கண் பொசுங்குகிறது. புறக்கண் மழுங்குகிறது. அவன் வாழ்வே புதை சேற்றில் விழுந்த வனைப்போல் ஆகிவிடுகிறது. ஆகவே கண்ணியமில்லாத கொலைச் செயலை நிறுத்து, புண்ணியச் செயலான உயிர்காக்கும் கலையை வளர்த்து, என்று கொல்லாமை அதிகாரத்தை தொடங்கி வைக்கிறார். 322. பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை பொருள் விளக்கம்: பகுத்து உண்டு - தெளிவாய் கூறப்பட்டு உள்ளது என்னவென்றால் பல்லுயிர் பல உயிர்களையும் ஒம்புதல் - தீதுவராமல், காப்பாற்றி வளர்த்தல் நூலோர் = கற்றறிந்த அறிஞர்கள் தொகுத்தவற்றுள் எல்லாம் ஒழுங்குபடுத்திய கருத்துக்கள் எல்லாவற்றிலும் தலை = சிறந்ததாகும் - i