பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/511

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51() டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா படுத்தி நிமிர்ந்து நில்லுங்கள். வாழ்க்கைப் பேற்றினை உயர்த்திக் கொள்ளுங்கள் என்று நான்காவது குறளில் நறுக்குத் தெறித்தாற் போல் குறிக்கிறார். 325. நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் தொலைஅஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை பொருள் விளக்கம்: நிலைஅஞ்சி = உலகத் தலைமைக்கு நீத்தார் - பாவச்செயல் துறந்தார் உள்எல்லாம் = மன எழுச்சிஎல்லாம் கொலைஅஞ்சி = பிற உயிர்களின் உயிர்வதைக்குப் பயந்து கொல்லாமை = கொல்லாமையை மேற்கொள்ளும் பொழுது சூழ்வான் = உறவினர், மற்றும் சூழ்ந்தவர்கள் மத்தியில் தலை = பெருமைக்குரிய பேற்றினைப் பெறுகிறான் சொல் விளக்கம்: நிலை = உலகம்; அஞ்சி = தலைமை; நீத்தார் - பாவம் துறந்தவர்கள் உள் = மன எழுச்சி; சூழ்வோன் = உறவினர், சூழ்ந்து நிற்பவர்கள். முற்கால உரை: பிறப்பு நின்ற நிலையை அஞ்சி, பிறவாமை பொருட்டு, மனை வாழ்க்கையைத் துறந்தார் எல்லாருள்ளும், கொலைப் பாவத்தை அஞ்சி கொல்லாமையாகிய அறத்தை மறவாதவன் உயர்தவன். தற்கால உரை: தீமை நிறைந்த சூழ்நிலையைக் கண்டு அஞ்சி அதனை விட்டு நீங்கியவர்கள் எல்லாருள்ளும், கொலை செய்வதற்கு அஞ்சிக் கொல்லாமை என்னும் அறத்தைப் போற்றுகின்றவன் தலை சிறந்தவன் ஆவான். புதிய உரை: பாவம் துறந்தவர் தமது மன எழுச்சியால் கொலைக்கு அஞ்சிக் கொல்லாமையைக் கடைப் பிடிக்கிறபோது, அவர் உறவினர் மற்றும் சூழ்ந்தவர் எல்லாருக்கும் நிலை வேறுடைய தலைமை நிலையை அடைகிறார். விளக்கம்: தலைமை ப் பேற்றை விரும் புகிறவன், தவறுகள் செய்யாதவனாக, பாவங்கள் புரியாதவனாக, கொலை உணர்வு