பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/516

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை のIの உடலால் அ ழிந்த ாலும் உயிரால் மடிந்தாலும் அல்லது துயரால் கிடந்தாலும் அவர்கள் நோக்கமும் ஏக்கமும் அதிகாரத்திற்காகவே ஆசைப்படுகிறது. அல்லல் படுகிறது. இப்படிப்பட்ட விருப்பம்தான் ஆசையாக மாறி முடிவில் வெறியாக ஆகி முடிவைக் கொடுத்துவிடுகிறது. எனவே அதிகாரமானது அகக் கண்ணை மறைக்கும். புறக் கண்ணை அழிக்கும் அறிவுள்ளவர்களே அகப்பட்டுக் கொண்டு திண்டாடி அழிந்துபோவதால், அகிலத்து மக்களே நீங்கள் ஆக்கம் பெரிதென்று ஆசைப்பட்டு அகமகிழாதீர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வள்ளுவர் எட்டாவது குறளில் எச்சரிக்கிறார். 329. கொலை வினையர் ஆகிய மாக்கள் புன்மை தெரிவார் அகத்து. பொருள் விளக்கம்: கொலை வினையர் = கொலையைத் தொழிலாகக் கொண்டவர்களாக ஆகிய மாக்கள் = மாறிய மனித விலங்குகள் புலை வினையர் = இழிந்த சண்டாளர்கள் ஆவார்கள் அகத்து - அவர்களின் உள்ளத்தில் உள்ளதை புன்மை = அவர்களது பார்வையின் மூலமாகவே தெரிவார் = மற்றவர்கள் அறிந்து கொள்வார்கள் சொல் விளக்கம்: கொலை வினையர் - கொலைத் தொழிலர் புலை வினையர் = சண்டாளர் ஈனர் இழிகுலத்தார் புன்மை - பார்வை ஈனம்; தெரிவார் அறிந்து கொள்வார் அகத்து மனதில் உள்ளது முற்கால உரை: கொலைத் தொழிலை உடையாராகிய மாந்தர் அத்தொழிலின் கீழ்மையை அறியாத நெஞ்சத்தார் ஆயினும் அறிவார் நெஞ்சத்துக் கொலைத் தொழிலினை. தற்கால உரை: கொலையைத் தொழிலாகக் கொண்டவர்களை கொலைத் தொழில் செய்யும் இழிந்த மக்கள் என்றுதான்.அறிவுடைய மனிதர்கள் கருதுவார்கள்.