பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/517

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

516 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா Ꮗ ] ↑) புதிய உரை: கொலையைத் தொழிலாகக் கொண்ட மனித விலங்குகள், ஈனப் பிறவி பெற்ற சண்டாளர் ஆகின்றார்கள். அவர்கள் உள்ளத்தில் உள்ளதை எல்லாம் அவர்களது பார்வைகளின் மூலமாகவே மக்கள் அறிந்து கொள்கிறார்கள். விளக்கம்: ஆன்மா அந்தரங்கமானது. வடிவம் தெரியாதது. ஆனால் அதனுடைய சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் முகந்து கொண்டு வெளி உலகத்ததிற்குக் காட்டுவது முகம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அகத்தை அகிலத்திற்குக் காட்டுவதற்கு வெளிக் கொண்டுவந்த முகத்திற்கு உதவுகிற உறுப்புக்கள் கண்கள் ஆகும். அந்தக் கண்களின் ஒளி தான் பார்வையாக மாறுகிறது. பார்வையில் நவரசங்களும் வந்து விழுமல்லவா? ஆகவே, கொலை வினையர்கள் அவர்களது பார்வையால் அகப்பட்டுக் கொள்கிறார்கள் என்ற கருத்தை, வள்ளுவர் மிக அழகாக எடுத்துரைக்கிறார். 330. உயிருடன்பின் நீக்கியார் என்ப செயிருடம்பின் செல்லாத்தீ வாழ்க்கை யவர். பொருள் விளக்கம்: உயிர் உடம்பின் = மற்றவர்கள் உடம்பை விட்டு உயிரை நீக்கியார் என்ப = நீக்குகிற செயலை செய்பவர்கள் செயிருடம்பின் = தனது ஊனமுற்ற உடம்புடன் செல்லா = செத்துத் திரிகிற தீவாழ்க்கை - ஈன வாழ்க்கையை வாழ்கின்ற அவர் = சண்டாளர்கள் ஆவார்கள். சொல் விளக்கம்: செயிர் ஊனம் செல்லாதல் செல்லாதல் = இறந்துபோதல் முற்கால உரை: நோக்கலாகா நோயுடம்புடனே வறுமை கூர்ந்த இழி தொழில் வாழ்க்கையினை உடையாரே, இவர் முற்பிறப்பின்கண் உ யிர்களை - - 郵 o o f), # - * * இ --- - (T), ,-> ○。 o * | * # அவை நின்ற உடம்பினின்று நீக கனவரெனறு சொல்லுவா வினைகளை அறிந்தோர்.