பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/518

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 517 தற்கால உரை: நோய் பொருந்திய உடம் புடன் வறுமைமிகுந்த இழிந்த வாழ்க்கை உடையவர்களை பல உயிர்களை பல உடம்புகளில் இருந்து நீக்கியவர்கள் என்று குற்றம் சாட்டுவர் பெரியோர். புதிய உரை: மற்ற உடல்களில் இருந்து உயிர்களைப் பிரிக்கும் மாக்கள் எல்லோரும், தமது ஊன ஊடம்புடன் நடைப்பிண வாழ்க்கையை வாழ்கின்ற ஈனர்களாக ஆகிறார்கள். விளக்கம்: ஒரு உயிரை ஒருவன் கொல்லும் பொழுதே தானும் உடலால் நலிந்தவனாகி, உயிரால் இழிந்தவனாகிறான். அவனது உடல் எல்லா உறுப்புக்களைக் கொண்டு இருந்தாலும் ஊனமானதாகவும், அவனது மனம் சிந்திக்கின்ற திறம் கொண்டதாக இருந்தாலும் ஈனமாகவும் கருதப்படுகிறது. ஊனமும் ஈனமும் ஞானத்தை வேரறுத்து வீழ்த்துவதால், அவனது வாழ்வு மரணக் குழியில் அல்லாடிக் கிடக்கின்றது. அதனால், அவன் ஜெகத்திலே செத்துத் திரியும் ஜவனாக வாழ்கிறான். எனவே கொல்லாமையின் கொடுமையைத் தெரிந்துகொண்டு நீங்கள் அதைச் செய்யாமையில் சிறப்புடன் வாழுங்கள் என்று வள்ளுவர் இந்த அததிகாரத்தை சிறப்புடன் முடிக்கிறார்.