பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/520

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 519 331. நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறிவு ஆண்மை கடை பொருள் விளக்கம்: நில்லாத = நிலையில்லாத வற்றை = கருத்துக்களை எல்லாம் நிலையான = உலகில் வாழ்விக்கும் என்றுணரும் - என்று அறிந்து கொள்கிற புல்லறிவு = கீழ்மையான அறிவு ஆண்மை = ஆளுந் தன்மையான மனமுயற்சியை கடை = தடை செய்யும் சொல் விளக்கம்: நில்லாத = நிலையில்லாத; வற்றை = கருத்தை புல்லறிவு = கீழ்மையான அறிவு - ஆண்மை - மனமுயற்சி, ஆளுந்தன்மை; கடை = அழிந்து மேலும் = தாழ்ந்தோன் ஆக்கும் முற்கால உரை: நிலையுதல் இலவாகிய பொருள்களை நிலையுதல் உடையதென்று கருதுகின்ற புல்லிய அறிவினை உடையராதல் துறந்தார்க்கு இழிவு. -- தற்கால உரை: நிலையற்றவைகளை எல்லாம் நிலைத்து நிற்கக் கூடியன என்ற உண்மையான அறிவினை உடையவராக ஒருவர் இருத்தல் அவரது இழிவான நிலையைக் குறிப்பிடுவதாக இருக்கும். புதிய உரை: நிலையில்லாத கருத்துள்ள பொருள்களை எல்லாம் வாழ்வுக்குத் துணை என்று நம்புகிற ஒருவரது கீழ்மையான அறிவு, அவரது மனமுயற்சி, ஆளுந்தன்மையை அழித்து மேலும் தாழ்ந்தோர் ஆக்கும். விளக்கம்: - வாழ்க்கையில் வருகிற எல்லாவற்றையு மே பொய் நிலை என்று சொல்லி ஒரு உன்னதமான வாழ்வை வழிநடத்துகிற உடம்பை மெய் நிலை என்று வள்ளுவர்குறிக்கிறார். உலக மாயையை உவந்து ஏற்கும் அறிவு புல்லறிவு. அந்த மாயையில் இருந்து விடுபட்டு வெளி வந்து மணியான வாழ்க்கையை வாழ்வது நல்லறிவு என்கிறார் வள்ளுவர்.