பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/522

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 521 விளக்கம்: கூத்தாடுகிற சபையில் கூட்டம் சேர்ந்தால் கத்தாடுபவர்களுக்குக் கொண்டாட்டம். அங்கே எழுகின்ற கைதட்டல், ஆரவாரக் கூச்சல் இடிமுழக்கம் போன்ற வெடிச்சிரிப்பு எல்லாமே அவர்களை மெய்மறக்க வைக்கும். காட்சி முடிந்ததும், மாட்சி முடிகிறது. காண வந்த கூட்டம் ஈசலாகப் பறந்து போகிறது. அதுபோலவே மனித வாழ்க்கை. அதிலே வந்து சேருகிற அழகும், கல்வியும், ஆக்கமும், இன்பமும், செழிப்பும் எல்லாம் செல்வமாகி, வாழ்வுக்கு வண்ணம் கூட்டுகின்றன. அந்த வண்ணத்திற்கு வடிமாய் அமைந்திருப்பது மெய்யாகிய உடம்பு. அந்த வாழ்வில் சுவடுகளாக வந்த எல்லா நிலையும் அழியும். ஆனால் வாழ்க்கை அழிவதில்லை. ஆனால் மெய்யில் உள்ள, சக்தியும், செழுமையும் சிதைந்துபோனால் இருளாகி விடுகிறது என்கிற தத்துவத்தை வள்ளுவர் இரண்டாம் குறளில் எடுத்துக் கூறுகிறார். 333. அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் அற்குப ஆங்கே செயல் பொருள் விளக்கம்: அற்கா = நிலையில்லாமல் இயல்பு இற்று வரலாறு அழிவது செல்வம் = செல்வ வாழ்க்கை அதுபெற்றால் - அப்படிப்பெற்ற செல்வ வாழ்க்கையை அற்குப = நிலைத்து நிற்பதற்கு ஆங்கே - வாழும் காலத்தே செயல் - ஒழுக்கத்தைப் பின்பற்ற வேண்டும் சொல் விளக்கம்: அற்கா - நிலையாக இயல்பு வரலாறு; இற்று அழிவது செல்வம் - செல்வ வாழ்க்கை அற்குப நிலைபெற ஆங்கே - அக்காலத்தே செயல் ஒழுக்கம் முற்கால உரை: == H - o へ o = -l. -- so .." - - - -- நில்லாத இயல்பினை உடைத்து செல்வம். அதனைப் பெற்றால் அதனால் செய்யப்படும் அறங்களை அப் பெற்ற பொழுதே செய்க.