பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா H புதிய உரை: உடல் வலிமையும், திண்மையும், தீயவைகளை அகற்றுவது நீத்தார்க்கு ஒப்பற்ற ஞானமாகத் திகழ்வதால், சிறப்புப் புலன்கள் ஐந்தையும் புலன் இழுக்கங்களிலிருந்து காப்பாற்றி மேன்மை பயக்கக் கூடிய காப்பிடமாக நிற்கிறது; அறிவூட்டுகிறது. விளக்கம்: உடல் வலிமையால் மன வலிமை மிகுதியாகிறது. அதனால் உடலும் மனமும் ஐம் புலன்களின் ஆங்காரச் செயல்களைக் கட்டுப் படுத்துகிறது. நெறிப்படுத்துகிறது. அதனால் கட்டுப்பாட்டுடன் விளங்குகிற துறந்தாரின் மேன்மைகளை வைத்துக்காக்கும் இறப்பிடமாகவும் செயலாற்றுகிறது. துறவும் நோன்பும் புலன்களை அடக்குவதாலும், ஒடுக்குவதாலும் சீர்மைப்படுத்தி நீர்மைப்படுத்துவதாலும் தான் நடக்கும். அத்தகைய துறவு நிலைக்குத் தேக வலிமை தான் காரணம். அதனைப் பெறுகிற ஆற்றலாளரே, நீற்றார் பெருமையில் நிலைத்து நிற்கிறார். பல மற்றவன் மன நலத்திலும் வளமற்றுப் போவதால், மேன்மை பெற முடியாது என்பதை வள்ளுவர் இங்கே வலிறுத்திக் காட்டுகிறார். 25. ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலும் கரி பொருள் விளக்கம்: ஆற்றல் = உடல் பலத்தாலும் மனத் திண்மையாலும் ஐந்தவித்தான் = ஐம்புலன்களின் அடங்காத்தனத்தை அவித்தவன் இந்திரனே - (இந்திரத்தைக் கட்டுப் படுத்திவென்றதால்) அவன் இந்திரன் என்று அழைக்கப்படுகிறான். அகல் விசும்பு உள்ளார் - பூமியில் அகன்றும் உயர்ந்தும் உள்ள கோமான் = பெருமையிற் சிறந்த தலைவனாக சாலும் = மேன்மை பொருந்தியதால் கரி - அவன் எல்லோருக்கும் (விருந்தினராக) சான்றாக ஆகிவிடுகிறான். o சொல் விளக்கம்: அகல் - அகன்ற, விரிவடைகிற; அகலிடம் - பூமி கோமான் = தலைவன் பெருமையிற் சிறந்தோன்