பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/545

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

544 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா ஆகவே, உடலை வாட்டுகின்ற ஆசைகளை, உடலால் தான், அழிக்க முடியும், வேர் அறுக்க முடியும் என்ற ஒரு புதுக் கொள்கையை வள்ளுவர் இங்கே புகுத்திக் காட்டுகிறார். மெய்யை மேலோட்டமாக உடம்பு என்று சொல்லாமல், கண்ணே என்று இங்கே குறிப்பிட்டு இருப்பதால், உடம்பானது வலிமையை விளைவிக்கும் ஊற்றுக் கண்ணாக இருப்பதால் தான். உடலில் வலிமையினால்தான் உலக வாழ்க்கையை அனுபவிக்க முடியும். உடலின் வலிமையால்தான் உலக அசைகளை மனவயலில் இருந்துகளையாகப் பிடுங்கி எறிய முடியும் என்கிறார் வள்ளுவர். 350. பற்றுக பற்றுஅற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு பொருள் விளக்கம்: 睡 睡 # 郵 H 睡 o பறறு அறறான = உலக ஆசைகளைக கடநதவன பல்+தினை = பற்றினை, சிறுசிறு அனுபவங்களைக் ககூட பற்றுக = ஏற்றுக்கொள்க அப்பற்றை = ஏற்றுக்கொண்ட அந்தக் கொள்கையை பற்றுவிடற்கு = உலக ஆசைகளை அழிப்பதற்கு பற்றுக = நீபொருந்திக்கொள்க சொல் விளக்கம்: பற்றற்றான் = உலக ஆசைகளை கடந்தவன் பல் தினை = பலவாறான அனுபவங்கள் பற்று = பெற்றுக்கொண்டதை பற்றுக = பொருந்திக்கொள்க முற்கால உரை எல்லாப் பொருளையும் பற்றி நின்று பற்றற்ற இறைவன் ஒதிய வீட்டு நெறியை, இதுவே நன்னெறியென்று மனத்திற் கொள்க. கொண்டு அதன்கண் உபாயத்தால் அம்மனத்தால் செய்க. விடாது வந்த பற்றை விடுதற்கு. தற்கால உரை: ஒரு பொருளிலும் பற்றில்லாத அறிவாற்றலில் சிறந்தோனது அன்பை, ஒருவன் தன் மனத்தில் பற்றிக் கொள்ள வேண்டும். இருவகைப் பற்றுக்கலையும் ஒழிப்பதற்கு அவன் அந்த அன்பையே உறுதியாகப் பற்றிக் கொள்ள வேண்டும்.