பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/546

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை புதிய உரை: உலகில் உள்ள அனைத்தையும் கடந்த உயர்ந்தவரிடம் பெற்ற அனுபவங்களை ஏற்றுக் கொண்டவர். அதன் தொடர்ச்சியாகப் பொருந்த வாழ்ந்தால், உலக ஆசைகளை விட்டுவிட முடியும். விளக்கம்: பற்றற்றான் என்ற சொல்லுக்கு, கடவுள் என்றும், உலகில் உள்ள அனைத்தையும் கடந்தவன் என்றும் பொருள்கள் உண்டு. கட+உள் - என்று பிரிகிற சொல்லுக்கு, தன்னிடம் உள்ளதைக் கடந்தவன். தன் உள்ளத்தைக் கடந்தவன். இந்த உலகத்தைக் கடந்தவன் என்று பொருள் கிடைக்கிறது. மனிதக் கடவுள், மனிதன் படைத்த கடவுள் என்று இருபெரும் வித்தியாசங்கள் இங்கே எழுகின்றன. உயிரோடு உலா வருகின்ற மனிதக் கடவுள். அந்த உன்னத நிலையை அடைவதற்காகச் செய்த தவங்கள், மேற் கொண்ட விரதங்கள், பெற்ற அனுபவங்கள் மிக அதிகமானவை. ஆக, ஒழுக்கத்தைப் பின்பற்ற விரும்புகிற ஒவ்வொருவரும் அவரது அனுபவங்களை உணர்க. தெரிந்து கொள்க. பொருந்தித் தொடர்க. பற்றி வாழ்க. அப்பொழுதுதான் பற்றினை விடமுடியும். என்று பற்றுக அப்பற்றினை என்று பண்பான முறைகளைக் காட்டுகிறார் வள்ளுவப் பெருமகனார்.