பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/549

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

548 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா அவதிப்படுகிற ஆன்மாவை வைத்திருக்கிறவனுக்கு, அமைதியும் ஆனந்தமும் எப்படிக் கிடைக்கும்? ஆகவே அவனது வாழ்வு, வெட்டி முறிக்கப்பட்ட மரமாக, வெறுமை விளையாடும் தரித்திர பூமியாக விளங்குகிறது. அதனால் அவனது சுகவாழ்வில் சூன்யமே கவ்விக் கிடக்கிறது என்று முதல் குறளில் வள்ளுவர் சொல்லுகிறார். 352. இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு பொருள் விளக்கம்: மருள்நீங்கி= பேய்க்குணமுடைய அஞ்ஞானம் நீங்கி மாசறு - தீமைகளைத் தீர்த்த காட்சியவர்க்கு = அறிஞர் பெருமக்களுக்கு இருள்நீங்கி - ஆணவமலம் நீங்கி இன்பம் பயக்கும் - அகமகிழ்ச்சியையே படைக்கும் சொல் விளக்கம்: இருள் - ஆணவமலம்; இன்பம் - அகமகிழ்ச்சி மருள் = பேய்க் குணம்; மாசறு - தீமையை விலக்கல் காட்சியவர் = அறிஞர்கள் முற்கால உரை: அவிச்சையின் நீங்கி மெய் வுணர்வுடையராயினார்க்கு அம்மெய்யுணர்வு பிறப்பினை நீக்கி வீட்டினைக் கொடுக்கும். தற்கால உரை: மயக்கத்திலிருந்து விலகி, குற்றமற்ற மெய்யுணர்வு உடையார்க்கு அம்மெய்யுணர்ச்சி துன்பத்தை நீக்கி இன்பத்தை அளிக்கும். புதிய உரை: பேய்க்குணம் படைத்த அஞ்ஞான ஆணவமலத்தை விலக்கித் தீய குற்றங்களைத் தீர்த்துவிடும் அறிஞர்களுக்கு, அகமகிழ்ச்சியே அளிக்கும். விளக்கம்: அகத்தில் மகிழ்ச்சி ஏற்படும் என்று சொல்லும் பொழுது கேட்பதற்கு நன்றாக இருக்கும். ஆனால் அகமாவது மகிழ்வதாவது? ஏனென்றால், அகத்திலே ஆணவமலம், அஞ்ஞான மலம் , காமமலம், சூதுவாது நிறைந்த எல்லா மலங்களும் பின்னிக்