பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/552

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 551 தற்கால உரை: மெய்யுணர்வு இல்லாதவர்கள் ஐந்து புலன்களின் உணர்வுகளை அடக்கி வென்றிருந்த போதிலும், அதனால் அவர்களுக்கு நிலைத்த பலன் ஏதும் ஏற்படுவதில்லை. புதிய உரை: உடல் உணர்வு இல்லாமல் தவறு செய்கிறவர்களுக்கு, உடம்பு பற்றி நன்கு அறிந்திருந்த போதிலும், அதனால் எந்தப் பயனும் ஏற்படுவதில்லை. விளக்கம்: ஐம்புலன்கள் யாவும் உடலைத் தரமாகக் காக்கவும், உரமாக வளர்க்கவும், உண்டாக்கப் பட்ட சிறப்பு உறுப்புக்களாகும். வெப்பம், காற்று, நீராகிய மூன்றால் உருவாக்கப்பட்ட இயற்கை நிலையைப் போல, உடலும் வெப்பம், நீர், காற்றால் சமைக்கப்பட்டிருக்கிறது. இயற்கையோடு உடலை, ஒத்து உடன் செல்லவே ஐம்புலன்கள் உதவுகின்றன. இந்த ஐம்புலன்களை வைத்துக் கொண்டு உடலைப் பற்றி சிந்திக்காமல், உடலுக்கு உயர்தன்மையை உருவாக்காமல் இருந்தால், அது தேங்காயை உருட்டுகிற நாய்க்குச் சமமாகும். புலனை ஆங்கிலத்தில் (Sense) என்பார்கள். ஐந்து புலன்கள் சரியாக இருந்தால் காமன்சென்ஸ் (Comman Sense) என்பார்கள். புலன் ஒன்று கெட்டாலும் அதற்குப் பெயர், நோசென்ஸ் (No Sense) என்பார்கள். புலன்கள் ஐந்தும் சரிவரப் பணியாற்றாமல் போனால் அதை நான் சென்ஸ் ' (Non Sense) என்பார்கள். அதுவே தீமைகளுக்குத் துணைபோகுமானால், அதை 'நியூசென்ஸ் (Nuisence) 676öILITissir. இன்றைய மனிதர்களின் எண்ண ஓட்டத்திற் கேற்ப, இந்தக் குறள் அமைந்திருப்பது, வள்ளுவரின் தொலை நோக்குச் சிந்தனையின் பெருமையைப் பறை சாற்றுகிறது. 355. எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு பொருள் விளக்கம்: எப்பொருள் எல்லாவிதமான உடல் அமைப்பும் எத்தன்மைத்து ஆயினும் எந்த சுபாவத்துடன் அமைந்திருந்தாலும் அப்பொருள் அந்த உடம்பினை மெய்ப்பொருள் - அரும்பாண்டம் என்று