பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/556

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 500 விளக்கம்: உடலின் உண்மையான மேன்மையைப் பற்றி, தானே ஆராய்ந்து அறிவது ஒரு முறை. பெரியோரின் உபதேச மொழிகளைக் கேட்டுத் தெளிவது ஒரு முறை. சிந்தித்ததால் ஏற்பட்ட சொந்த புத்தி: ஐம்புலன்களால் வெளி உலகில் கேட்டு வந்த புத்தி. இரண்டுந்தான் ஒருவனை வாழவைக்கும் என்பது வள்ளுவரின் கருத்து. அப்படி ஏற்பட்ட ஆன்ம ஞானத்தால், மனம் உறுதியாகிறது. உடலில் செயல் நிலைப்பாடுகள் உண்டாகிறது. அந்த உறுதி வந்தவுடனேயே விரும்பாத தீமைகளை வேரோடு பெயர்த்து எறிந்து விட வேண்டும் என்று வேகத்துடன் வலியுறுத்துகிற வள்ளுவர், உடம்பைப் பற்றி உணர்ந்து கொள்ளுங்கள், தெரிந்து கொள்ளுங்கள் என்று இந்தக் குறளில் தெளிவாக்குகிறார். 358. பிறப்புஎன்னும் பேதமை நீங்க சிறப்புஎன்னும் செம்பொருள் காண்பது அறிவு பொருள் விளக்கம்: பிறப்பு என்னும் = தீமைகளின் பிறப்பிடமாகிய பேதமை = அறிவின்மையானது நீங்க - விலகுமாறு சிறப்பு என்னும் - உடல் ஒன்றுக்கே உரிய மேன்மைக்கு செம்பொருள் = ஒழுக்கமாகிய உண்மை அறத்தால காண்பது - உடலைக்காப்பது அறிவு = அறிய வேண்டிய அறிவாகும். சொல் விளக்கம்: பேதமை = அறிவின்மை; சிறப்பு - ஒன்றுக்கே உரியது செம்பொருள் = அறம், ஒழுக்கம் முற்கால உரை: பிறப்பிற்கு முதற்காரணமாய அவிச்சைகெட விட்டிற்கு நிமித்த காரணமாய செவ்விய பொருளைக் காண்பது, ஒருவர்க்கு மெய்யுணர்வாவது. தற்கால உரை: ஒருவரின் பிறப்புடன் சேர்ந்து தோன்றும் அறியாமை நீங்க,

  • - i. # o s r = a. —" - வேண்டுமானால் அவனுக்கு சிறப்பு அளிக்க வல்லது என்று கறப்படுகின்ற உண்மையென்னும் பொருளைக் காண முயல்வதே

அறிவுடைமையாகும்.