பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/571

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

570 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா ஆசையை அழித்தவர்களுக்கு இன்பமானது தடைபடாது, முடிவடையாது, விரைவாக வந்து நிறைந்து வாழும். விளக்கம்: அவாவினால் அல்லல் வரும் என்றார் முந்தைய குறளில், ஆனால் இந்தக் குறளில் அவ ாவென்னும் ஆசைப் பேய்கள் துன்பத்தின் எல்லைக்கே துரத்திச் சென்று விடும். அதனால் வாழ்க்கையே வீணாகிவிடும் என்ற ஒருவரையறையை வரைந்து காட்டுகிறார் வள்ளுவர். ஆனால் அவா அற்றவர்களுக்கு இன்பமானது ஊற்றாக ஊறும். இன்பச் சுனையாக சுரக்கும். சுவாசக் காற்றாக உயிர்ப்பிக்கும். சுகத்தில் வாழவைக்கும் சொர்க்கமாக வாழ்விக்கும் என்ற பேருண்மையை வள்ளுவர் படம் பிடித்துக் காட்டுகிறார். 370. ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும் பொருள் விளக்கம்: அவாநீப்பின் அவாவை நீக்குகிறவன் ஆரா - பேரன்பின் இயற்கை - இலக்கணமாகத் திகழ்கிறான் அந்நிலையே அப்படி அவன் வாழ்கிற வாழ்க்கையே பேரா = பெருமைமிகுந்த இயற்கை = தகுதியும், பாக்கியமும் தரும் தந்து உயர்த்தும் சொல் விளக்கம்: ஆரா - பேரன்பு: இயற்கை - இலக்கணம் பகுதி, பாக்கியம் பேரா = பெரிய, பெருமை முற்கால உரை: ஒருகாலும் நிரம்பாத இயல்பினை உடைய அவாவினை ஒருவன் நீக்குமாயின், அந்நீப்பு அவனுக்கு அப்பொழுதே எஞ்ஞான்றும் ஒரு நிலைமையனாம் இயல்பைக் கொடுக்கும். தற்கால உரை: ஒருக்காலும் நிறைவு பெறாத இயற்கைத் தன்மையை உடைய அவாவினை ஒருவன் ஒழிப்பானேயானால், ஒழித்த அந்த நிலையிலே