பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/574

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 373 371. ஆகுகூழால் தோன்றும் அசைவுஇன்மை கைப்பொருள் போகுகூழால் தோன்றும் மடி பொருள் விளக்கம்: ஆகூழால் - நல்லதிர்ஷ்டம் தரும் பழவினை அசைவு இன்மை = முயற்சி தோன்றும் = உண்டாகும் கைப்பொருள் ஒழுக்கமுள்ள உடலானது கொடுமை நிறைந்த தீச்செயலால் மடிதோன்றும் = கேடுகளும், நோய்களும் உண்டாகும் சொல் விளக்கம்: ஆகூழ் - நன்மைதரும் பழவினை தோன்றும் = உண்டாகும், அசைவின்மை முயற்சி கை = ஒழுக்கம்; பொருள் உடம்பு போகூழ் = தீய பழவினை, மடி நோய் முற்கால உரை: ஒருவருக்குக் கைப் பொருளாதற்கு காரணமாகிய ஊழான் உயர்ச்சி உண்டாம். அஃது அழிதற்கு காரணமாகிய ஊழான் மடி உண்டாம். தற்கால உரை: ஆக்கும் முறைமையால் சோம்பலும், முயற்சியாகும். போக்கும் முறைமையால் முயற்சியும் சோம்பலாகும். புதிய உரை: பழவினைப்பயனில் உண்டாகும் நல்வினையால் ஒழுக்கம் உள்ள உடலுக்கு மேலும் முயற்சிகள் பெருகும். முன்வினை தருகிற தீவினையால் உடலுக்கு நோய்களும் கேடுகளும் மிகுதியாக உண்டாகும். விளக்கம்: ஆகுகூழ் என்பது ஆக்கம் தருகின்ற நல்வினை. போகுகூழ் என்பது கொடுமை பயக்கும் கடுவினை. நல்வினை உடலின் மனதைச் சாந்தப்படுத்துகிறது. ஆன்மாவை ஆனந்தப்படுத்துகிறது. உடல் உறுப்புக்களாகிய எலும்புகளை வலிமைப் படுத்துகிறது. நரம்புகளை, இரும்புபோல மாற்றுகிறது. அதனால்தான் அந்த உடலில் மகிழ்ச்சியும், எழுச்சியும், முயற்சியும் பெருகும் என்கிறார். தீவினையால் திகைக்கிற தேகமானது தடுமா றிப் போகிறது. தடம் புரள்கிறது. பயணத்தில் பங்கம் ஏற்படுகிறது. பகையான