பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/588

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 587 'திருக்குறள் புதிய உரை' பாராட்டுரை ஊரறிந்த, உலகறிந்த 'திருக்குறள் வாழ்வியல் நூலுக்கு, ஒரு மாபெரும் 'புதிய உரை எழுதிப் புரட்சியைச் செய்திருக்கிறார். உரையாசிரியர் டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா அவர்கள். இவர் விளையாட்டுத் துறையைத் தமிழ் இலக்கியத்தில் புகுத்திப் புதுமை செய்தவர்; செய்து கொண்டு இருப்பவர், 'விளையாட்டுக் களஞ்சியம்' என்கிற விளையாட்டுத் துறை தமிழ் இலக்கிய மாத இதழைத் தொடர்ந்து, இருபத்து நான்கு ஆண்டுகள் நடத்தி, அதன் வெள்ளி விழா ஆண்டை நோக்கி வீறு நடை போட்டுக் கொண்டு இருப்பவர். விளையாட்டுத் துறை மற்றும் உடற்பயிற்சிகளுக்காக இதுவரை 200-க்கு மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டவர். நாட்டிலே நடமாட விட்டிருக்கும் உரைநூல் ஏட்டிலேயெல்லாம், பரிமேலழகரைப் பின்பற்றியே திருக்குறள் உரைகள் திகழ்கின்றன. புதிய கோணத் தில், புதிய பார்வையில், புதிய சிந்தனையில் இவரைப்போல எவரும் திருக்குறளை இதுவரை ஆய்வு செய்தது இல்லையென்றே கூறலாம். திருக்குறளின் அதிகாரங்களிலோ, குறள்பாக்களின் சொற்களிலோ, இவர் எந்தவித மாற்றமும் செய்யவில்லை. துருவித்துருவி, ஆய்ந்து 'ந்து பார்த்து, குறள் பாக்களின் சொற்களுக்கு உண்டான ஏனைய அர்த்தங்களைக் கண்டறிந்து, அவற்றிலே சிறந்தவைகளை, பொருந்துபவைகளைப் பொறுத்திப் புரட்சிகரமாக ஒரு புதிய உரையை எழுதித் தந்திருக்கிறார். ஏன் இப்படியும் இருக்கக் கூடாது என்ற கேள்வியை, உங்கள் உள்ளத்திலே எழுப்பிக் கொண்டு, 'புதிய உரை நூலைப் படித்தால் புரியும் - தெரியும். உண்மைதான் என்று உங்கள் உள்ளமே அறியும். உரையாசிரியர் டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா அவர்கள், ஒவ்வொரு குறளுக்கும் பொருள் விளக்கம், சொல் விளக்கம், முற்கால உரை, தற்கால உரை, புதிய உரை என்று எழுதியிருப்பதோடு, புதிய உரைக்கான விளக்கத்தையும் விரிவாகவே எழுதியிருக்கிறார். நவில் தொறும் நூல் நயம் போலும் என்பதற்கொப்பப் பயில் தொறும் பல புதிய கருத்துக்களை வாரி வழங்கிக் கொண்டிருப்பது வையப் பொதுமறையாகிய திருக்குறளேயாகும். பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லாத் துறைக்கும் இயல்புதான் என்றால், அது திருக்குறளுக்கு மட்டும் விதிவிலக்காகி