பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮌ8 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 4. அறன் வலியுறுத்தல் அதிகார விளக்கம்: நீத்தார் பெருமை எனும் அதிகாரத்திற்கு அடுத்ததாக வைக்கப்பட்டிருக்கிறது அறன் சிறப்பு. அறத்தின் சிறப்பு என்று கூறாமல், அறன் சிறப்பு என்பதால், அறத்தைச் சிறப்பாகப் பின்பற்றுகிற ஒருவரை பெருமைப்படுத்தும் முகமாக அவரை அறன் என்றே அழகு பெயரிட்டு அழைக்கிறார். அறன் என்பதற்கும் நீத்தார் என்பதற்கும் உள்ள வேறு பாட்டையும் வள்ளுவர் மிகத் துல்லியமாக விளக்கிக் காட்டுகிறார். நீத்தார் என்பவர் தனியராக வாழ்கிற தனித்தன்மை உள்ளவர். உலகுடன் வாழ்ந்தாலும் ஒன்றி விடாத பற்றற்ற நிலையில் அறன் என்பவர் துணையோடு உறவாடி, இல்லறத்தில் ஈடுபட்டும், இல்லறம் காக்கப் பாடுபட்டும் வாழ்கிற இல்லறன். நீத்தார் துறவறன் என்றால், இணையற்ற இல்லற வாழ்வில் ஈடுபடுபவன் இல்லறன் ஆகிறான். அந்த இல்லறன் நல்லறன் ஆக வாழ்வது எப்படி என்ற அற்புத வழிகளைத்தான் அருமையாகப் பாடியிருக்கிறார் வள்ளுவர். நீத்தார் போல வாழ்வது எல்லோராலும் முடியாது. அதனால் அவர் காட்டுகிற அறவழியில் சென்று அறனாக வாழலாம் அல்லவா? இங்கே வள்ளுவர் காட்டுகிற அறவழி என்பது, வாழ்வுக்குரிய தேவைகளை எல்லாம் தேடிக் கொள்ளுங்கள். ஆனால், தேவைகளுக்குள்ளேயே சங்கமமாகி சாய்ந்து விடாதீர்கள். தேய்ந்து போகாதீர்கள் என்பதுதான். பற்றில்லாத மனம் கொள்ளுங்கள். பற்றற்ற நிலை தொடர்ந்து வரும். ஆகவே அறம் காக்கும் அறனாக வாழுங்கள் என்று வழி காட் டிவிடுகிறார் வள்ளுவர். வலியுறுத்தி இங்கே நெறிப்படுத்துகிறார்.